ஒவ்வொரு பண்டிக்கைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. பொங்கலுக்கு பொங்கலும், கரும்பும், ராம நவமிக்கு பாணகம், சிவராத்திரிக்கு கலி, கிருஷ்ண ஜெயந்திக்கு வென்னை மற்றும் சீடை, நவராத்திரிக்கு சுண்டல், சரஸ்வதி ஆயுத பூஜைக்கு பொரி கடலை, விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, கார்த்திகைக்கு தீபமும், பொரியுரண்டையும்.

 

ஆனால் பண்டிகைகளின் அரசன் தீபாவளிக்கு ?

தீபாவளி என்றாலே அதிகாலை எண்ணை குளியலும், பட்டாசும்தான். பட்டாசு இல்லாத தீபாவளியை கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாது.

ஒரு பதினைந்து இருபத்து ஐந்து வருடம் முன்பு தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்பே பட்டாசுகள் ஒலிக்க தொடங்கும். தீபாவளி நெருங்க நெருங்க அது அதிகரிக்கும். ஆனால் இன்று. தீபாவளி அன்று ஒரு நாளைக்கு மட்டுமே என்று இது சுருங்கி விட்டது. ஏழைக் குழந்தைகளின் கைகளில் இருந்து பட்டாசுகள் பறிக்கப் பட்டு விட்டன. பட்டாசு என்பது பங்களா வீட்டு மக்கள் வெடிக்கும் பொருளாகி விட்டது. பணக்கார குழந்தைகளின் வெடி முழக்கங்கள், ஏழைக் குழைந்தகளின் ஏக்கங்களை இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும் ? பண்டிகை என்பது அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியது அல்லவா ?

பட்டாசுகள் தேவையற்றவை என்று சிலர் சொல்வதுண்டு. காசை கரியாக்காதே, என்று சொல்பவரை பார்த்து கேட்கிறேன், நீங்கள் இறந்தால் உங்கள் உடம்பு கூடதான் கரியாகப் போகிறது. அந்த உடம்பிற்காக என்னவெல்லாம் செய்கிறீர்கள் நீங்கள்.

அடுத்து இந்த "க்ரீன் தீபாவளி" என்று முழக்கமிடுபவர்களை பார்த்து சிரிப்புதான் வருகிறது. 365 X 24 நாட்கள், உலக அளவில் நடத்தப்படும் தொழிற்சாலை புகைகளாலும், வாகண புகைகளினாலும் நடக்காத சுற்று சூழல் மாசு தீபாவளி அன்று நடந்து விடப் போகிறதா ? பிள்ளை பருவத்தில் பாரம்பரியமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை தடுப்பதில் அப்படி என்ன ஒரு கேடு கெட்ட எண்ணம் பலருக்கு உள்ளது என்று புரியவில்லை. நம் கலாச்சாரத்தை சுத்தமாய் அழித்து விடும் நோக்கில் நடத்த படும் பல்வேறு சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. "ஹாப்பி நியு இயர்" என்று கோடிக்கணக்கான செலவில் சீனத்து பட்டாசுகளை வெடிப்பது இப்போது புதிய ஃபேஷன் ஆகி போய்விட்டது.

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது அதிகரிக்கப் பட வேண்டும். பண்டிகை கொண்டாட்டங்கள் தான் பாரத கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. தீபாவளி பண்டிகைகளின் அரசன், பட்டாசுகள் அந்த கோலாகல‌த்தின் அடிப்படை. அதை பிடுங்க நினைப்பவர்கள் அதற்கு பெரும் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.