மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறது.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், திமுக. இரண்டும் விலகிவிட்டதால் இப்போதைக்கு மாயாவதி கட்சியைத் தான் மத்திய அரசு மலைபோல நம்பி உள்ளது.

மாயாவதி கொடுக்கும் ஆதரவுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மத்திய அரசு திரும்பபெற வைத்தது. அதன் பிறகு மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி பணத்தை முடக்கிவைத்ததில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் மாயாவதிக்கு டெல்லியின் முக்கியபகுதியில் 3 அரசு பங்களாக்களை மத்தியஅரசு ஒதுக்கி கொடுத்திருப்பது தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த 3 பங்களாக்களும் பாராளுமன்றம் அருகே குருத்வாரா ரகப்கஞ்ச் சாலையில் மிக முக்கியமான லுட்யென்ஸ் மண்டலத்தில் உள்ளது.

மாயாவதி, பகுஜன்சமாஜ் கட்சி மற்றும் அந்தகட்சி நடத்தும் டிரஸ்ட் ஆகிய 3 பெயர்களில் இந்த 3 பங்களாக்களை மத்திய ஊரக அமைச்சகம் ஒதுக்கீடுசெய்துள்ளது. அந்த பங்களாக்கள் ஒவ்வொன்றும் தலா 4 படுக்கை அறை வசதிகொண்டது.

இந்த 3 பங்களாக்களையும் ஒன்றாக இணைத்து பகுஜன்சமாஜ் கட்சியின் டிரஸ்ட்பெயரில் மாற்றி உள்ளனர். அரசு பங்களாக்களை எம்பி.க்கள் யாரும் இடித்துக் கட்டக்கூடாது என்று விதி உள்ளது.

ஆனால் அந்தவிதியை மீறி மாயாவதி அந்த 3 பங்களாக்களிலும் மாற்றங்கள்செய்துள்ளார்.இந்த 3 பங்களாக்கள்தவிர குருத்வாரா ரகப்கஞ்ச் சாலையில் மாயாவதிக்கு 4–ம் நம்பர் வீடு ஒன்றும் தனியாக உள்ளது. இதன் மூலம் மாயாவதிக்கு 4 பங்களாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு பாஜக. கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசை ஆதரிக்கும் ஒரேகாரணத்துக்காக அளவுக்கு அதிகமாக சலுகைகள் காட்டப்படுவதாக பாஜக. குற்றஞ்சாட்டி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.