நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

காலை 9.55 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா 11.30 வரை

நடைபெறுகிறது. முன்னதாக காலை 9.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் அமர்ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சரும் விஜய் சவுக்கில் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர்.

இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் டாக்டர்.ஹஜ் யுதோயோனா கலந்து கொண்டுள்ளார். இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினரை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

குடியரசு தின அணிவகுப்புக்கள் 9.55 மணிக்கு துவங்கி 11.30 வரை நடைபெறுகிறது. செங்கோட்டையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் வீர தீர செயல்புரிந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். வண்ணமயமாக நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். காபூலில் நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் வீரதீர செயல்புரிந்த மேஜர் லைஸ்ராம் ஜோதின் சிங்கிற்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

{qtube vid:=I8J9sKr9zg0}

Tags:

Leave a Reply