பாஜக பிரதமர்வேட்பாளரும், குஜராத் முதலவருமான நரேந்திரமோடி பெங்களூரில் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:-

மோடி மைதானத்திற்கு வந்த போது கரகோஷங்கள் விண்ணைப்பிளந்தன. மோடி தனதுபேச்சை கன்னடத்தில் தொடங்கி கர்நாடகத்தின் மாபெரும் தலைவர்களை பாராட்டி பேச்சைத்தொடங்கினார்.

பாரதரத்னா விருது பெற்றுள்ள சச்சின்டெண்டுல்கர், பேராசிரியர் சிஎன்ஆர் ராவ் ஆகியோரை நான்பாராட்டுகிறேன்.

சிலிக்கான் வேலிக்குப்பிறகு உலகிலேயே தகவல் தொழில்நுட்பத் துறைக்காகவே உள்ள ஒருஊர் எது என்றால் அது பெங்களூர்மட்டுமே. இதற்குக்காரணம், வாஜ்பாய் ஆட்சியின் போது தகவல் தொழில் நுட்பத் துறைக்காகவே தனியாக ஒரு அமைச்சகத்தை பிரதமர் வாஜ்பாய் ஏற்படுத்தியது தான். இதனால் தான் பெங்களூர் இந்தளவுக்கு வளரகாரணமாகும்.

தனியாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தையும் வாஜ்பாய் அரசு தான் கொண்டுவந்தது. அதேபோலத்தான் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும்திட்டத்தையும் வாஜ்பாய் அரசு உருவாக்கியது.

ஜனநாயகத்தை இன்று குழிதோண்டிப் புதைக்கும் வகையில் நடந்துகொள்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதுதான் காங்கிரஸ்வழி ஜனநாயகப்பாதை போலும். இதற்குமுன்பும் ஜனநாயகத்தை சிதைத்துள்ளது காங்கிரஸ். இப்போதும் அதையேசெய்கிறது. நாட்டை மிசாகாலத்திற்கு மீண்டும் கூட்டிச்செல்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்ததில்லை.

சமூக வலைத்தளங்கள், மீடியாக்கள்மீ்து அடக்கு முறையை ஏவி வருகிறது காங்கிரஸ். சி.பி.ஐ.,யை இன்று காங்கிரஸார் தங்களது பழிவாங்கும் ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத தலைவர்களை சி.பி.ஐ.,யைக் காட்டி பயமுறுத்துகிறார்கள். மிட்டுகிறார்கள். தங்களுக்கு ஆதரவாக அவர்களைத் திரும்பவைக்க சிபிஐ.,யைப் பயன் படுத்துகிறார்கள்.

என்னைப் பாராட்டிப் பேசியதற்காக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாரதரத்னா விருதைப் பறிக்க வேண்டும் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். என்ன தைரியம் அவர்களுக்கு. அவர்களுக்குத் தைரியம் இருந்தால் விருதைப் பறிக்கட்டும் பார்க்கலாம்.

அதிகாரம் என்பது விஷம் என்று கூறுகிறார் ராகுல்காந்தி. அதாவது மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக, சக்திபடைத்தவர்களாக, உரிமை படைத்தவர்களாக விளங்குவதில் விருப்பம் இல்லாதவர்கள் காங்கிரஸார். அதனால் தான் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதிலிருந்து அவர்கள் விலகியே இருக்கிறார்கள். அந்த அதிகாரத்தைத் தான் விஷம் என்று கூறுகிறார் போலும் ராகுல்காந்தி.

கர்நாடக வரலாற்றில் இன்றுகூடிய கூட்டத்தை போல எந்த அரசியல் கட்சிக்கும் கூட்டம் கூடியதில்லை. அந்தவகையில் இன்றையகூட்டம் வரலாறு படைத்து்ளது. நான் பெங்களூரில் காவி அலையை காண்கிறேன்.

உள்ளுக்குள் உட்கார்ந்துகொண்டே அரசியல்செய்து வருகிறது காங்கிரஸ். ஆனால் பா.ஜ.க அப்படி அல்ல, வெளியில்போய் பணியாற்றுகிறது. மக்களுடன் தொடர்புடைய ஒரேகட்சி பாஜக மட்டுமே. நாட்டின் இளைஞர் வளத்தை ஓட்டுகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது காங்கிரஸ். அவர்களின் வளத்திற்காகவும், நலனுக்காகவும் அது கவலைப் படுவதில்லை. ஆனால் நாங்கள் இளைஞர்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்ற முனைகிறோம். அதுதான் எங்களது கனவாகும்.

நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த பா.ஜ.க முயல்கிறது. அதன்மூலம் உலகளாவிய வளர்ச்சியையும் நமதுநாடு சந்திக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், திறன்வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்தொகை ரூ. 1000 கோடி. ஆனால் அதேவளர்ச்சிக்காக சிறிய மாநிலமான குஜராத் ஒதுக்கிய தொகை ரூ. 800 கோடியாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.