மங்கோலியாவுக்கு ரூ.6,344 கோடி கடனுதவி வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மங்கோலிய தலைநகர் உலன்படோருக்கு மோடி சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் சைகான் பிலக்கை நேற்று அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது மங்கோலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாசார்பில் ரூ.6,344 கோடி கடனுதவி அளிக்கப்படும் என்று மோடி அறிவித்தார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, சைபர் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து மங்கோலிய நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். பின்னர் அதிபர் சாக்கி யாஜின் எல்பெக்டார் அளித்த மதியவிருந்தில் பங்கேற்றார்.

அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம் மங்கோலியாவில் அதிகம் உள்ளது. 2009-ம் ஆண்டே அந்த நாட்டிடமிருந்து யுரேனியத்தை பெற இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதுகுறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

Leave a Reply