குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியகருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. தங்கம் வாங்குவதால் பணவீக்கம் அதிகரிக்கவில்லை; நாட்டில் நடைபெறும் ஊழல்களால் தான் பணவீக்கம் அதிகரித்தது என சமிபத்தில் மோடி தெரிவித்திருந்தார்.

அதற்குப்பதில் அளிக்கும் விதமாக, “தங்கம் இறக்குமதியினால் பணவீக்கம் உயர்ந்ததாக நான் கூறவில்லை. பொருளாதாரம் குறித்து மோடி தவறானபாடம் எடுக்கிறார்’ என்று சிதம்பரம் தெரிவித்திருந்தார். சிதம்பரத்தின் இந்த கருத்தை கடுமையாக ஆட்சேபித்துள்ள பா.ஜ.க, அதற்காக அவர் மன்னிப்புகேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது ; மோடியின் கருத்துகுறித்து சிதம்பரம் அவசரமாக பதில் தந்துள்ளார் . இது, அவர்வகிக்கும் அமைச்சர்பதவிக்கு பொருத்தமானது அல்ல. அவர், தனதுகட்சியின் இயலாமையை வெளிப்படுத்தி உள்ளார்.

தனது தவறைமறைக்கும் வகையில் சிதம்பரம் பதில் அளித்துள்ளார். மோடி என்னகூறினார் என்று அவர் ஆராயவில்லை. “சிதம்பரத்துக்கு பாடம் எடுப்பதில் தான் ஆர்வம்; ஆனால், குஜராத்தில் சிறந்தஆட்சி மற்றும் வளர்ச்சியை அளிப்பதில் தான் மோடிக்கு ஆர்வம். பொருளாதாரமேதைகள் பலருக்கு மோடியின் செயல்குறித்து நன்குதெரியும். தற்போது நீடிக்கும் மோசமான நடப்புகணக்கு பற்றாக் குறைக்கு சிதம்பரமும், அவரது கட்சியும் தான் பொறுப்பு’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.