குஜராத் நர்மதா நதிக் கரையில் அமையவிருக்கும் சர்தார்வல்லபாய் பட்டேல் சிலைக்கு தளவாடபொருட்கள் சேகரிக்கும் நிலையை மக்களிடம் தெரியப்படுத்த இன்று ஒற்றுமை ஓட்டம் தொடங்கியது . குஜராத் வதோதராவில் இந்த ஓட்டத்தை முதல்வரும், பிரதமவேட்பாளரும் மோடி இன்று காலையில் துவக்கிவைத்தார்.

உலகிலேயே மிகப்பெரிய 182 மீட்டர் உயரம்கொண்ட மிகப் பிரம்மாண்ட சர்தார்வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோடி செய்துவருகிறார். இந்த சிலை அமைப்பதில் நாடுமுழுவதும் இருந்து மக்களின் பங்கு பரவலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் விவசாயிகளிடம் இரும்பு மற்றும் தளவாட சாமான்கள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும்விதமாக ஒற்றுமை ஓட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

டில்லி, பெங்களூரூ, கோல்கட்டா, மும்பை சென்னை என பல்வேறு நகரங்களில் இந்த ஓட்டம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் நாடு முழுவதிலிருந்தும் திரளாக பங்கேற்றனர்.

பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு வதோதராவில் பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி இந்த ஓட்டத்தை துவக்கி வைத்தார். அகமதாபாத்தில் நடைபெறும் ஓட்டத்தில் அத்வானி பங்கேற்றுள்ளார். டெல்லியில் நடைபெறும் ஓட்டத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டுள்ளார். அருண் ஜெட்லி, சுஷ்மா சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் நடந்த ஓட்டத்தில் மாநில பாஜக., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி சீனிவாசன் , உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.