திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மாரடைப்பால் மரணமடைந்தார். திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா, (வயது 91). இவரது அரண்மனை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அருகேஉள்ளது. இங்கு மன்னர் வசித்துவந்தார். வயது முதிர்வின் காரணமாக திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவர் மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து கடந்த 6-ந் தேதி அவரை திருவனந்த புரத்தில் உள்ள ஸ்ரீ உத்திராடம் திருநாள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் மன்னர் மார்த்தாண்ட வர்மா மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர்பிரிந்தது. இதைதொடர்ந்து மன்னரின் உடல் பத்மநாபபுரம் கோவில் அருகே உள்ள அரண்மனைக்கு சொந்தமான “லெவிஹாலில்’ பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மன்னர் மரணம் அடைந்தசெய்தி கேட்டதும், கேரளமக்கள் ஆழ்ந்தசோகத்தில் மூழ்கியுள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் திரண்டுசென்று அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பிரமுகர்களும் இறுதிமரியாதை செலுத்தினர்.

மரணமடைந்த மன்னரின் மனைவிபெயர் ராதா தேவி. இவர் 2005ம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். மன்னருக்கு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மன்னர் மார்த்தாண்டவர்மாவின் 91வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்தபோது மன்னர் மார்த்தாண்ட வர்மாவை அவரது வீட்டிற்குசென்று சந்தித்துபேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply