குஜராத் குல்பர்க்சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திரமோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியாஜாப்ரி தொடர்ந்த வழக்கை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்னும் இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 இஸ்லாமியர்கள் கலவரத்தில் இறந்தனர்.

முதல்வர் நரேந்திரமோடியின் தூண்டுதலின் பேரில்தான் இந்தப்படுகொலை நடந்தது என்று ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடந்து உச்ச நீதிமன்றம் சிபிஐ முன்னாள் இயக்குனர், ஆர்கே.ராகவன் தலைமையிலான சிறப்புவிசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வு குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் ஜாகியா மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல்மாதம் ஜாகியா, அகமதாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுமீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதி கடந்த அக்டோபர் 28ம்தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தார்.

பின்னர் இந்த வழக்கில் டிசம்பர் 26ம் தேதியன்று தீர்ப்புவழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மோடிக்கு எதிரான ஜாகியாஜாப்ரியின் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. இந்தகலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.