ஜனநாயக ஒற்றுமையை சீர் குலைக்கும் முயற்சியில் இந்தியாவில் ‌மொத்தம் 65 பயங்கரவாதகுழுக்கள் செயல்படுகின்றன எனவும் அந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கிவருகின்றன என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்பிஎன்.சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாதசெயல்களி்ல் ஈடுபடும் பயங்கரவாத கும்பல்களில் லஷ்கர்-இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்ஹத் உல் ஜிகாதி இஸ்லாமி உட்பட பல்வேறுஇயக்கங்கள் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளது. இந்தகுழுக்கள் அனைத்தும் குறிப்பாக புதுடில்லி, கர்நாடகா , உ.பி., குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், மற்றும் ஆந்திரபிரதேச மாநிலங்களில் செயல்பட்டுவருகின்றன.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் லஷ்கர்-இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கங்கள் முதல் 2 இடத்தையும் பிடித்துள்ளன. அசாம் மாநிலத்தில், பத்துகுழுக்கள், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் தலா நான்குகுழுக்கள், பஞ்சாபில் செயல்பட்டு வரும் பாபர் கல்சா இன்டர் நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத், காலிஸ்தான் கமாண்‌டோ ஆகிய மூன்று குழுக்கள் திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் இரண்டுகுழுக்கள் என பலபிரிவுகளாக செயல்பட்டு வருதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Tags:

Leave a Reply