குஜராத் கலவரம் மிகுந்த மனவேதனை தந்ததாக அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது; ஒருபுறம் நிலநடுக்கத்தால் ஏற்பட்டபாதிப்பு அதிகம் இருந்த சமயத்தில், மறுபுறம் கலவரம் மிகுந்த மனவேதனை தருவதாக் குறிப்பிட்டுள்ளார். அப்பாவிமக்கள் உயிரிழப்பிற்கு காரணமான குற்றவாளி என தம்மை கூறிவந்தது கவலை தந்ததாகவும் அவர் கூறினார்.

கலவரம் தொடர்பான வழக்கில் அஹமதாபாத் நீதிமன்றம் தந்த தீர்ப்பு குஜராத் மக்களுக்கான வெற்றி என்று கூறிய நரேந்திரமோடி, வாய்மையே வெல்லும் என்பதுதான் இயற்கைநியதி என்று சுட்டிக் காட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்தகலவரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி, கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. கலவரம்தொடர்பாக விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப்பு, மோடி குற்றமற்றவர் என்று சிலமாதங்களுக்கு முன்பு அறிக்கை தாக்கல்செய்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி உள்பட ஏராளமானோர் உயிரிழந்தது தொடர்பாக மோடிமீது தொடரப்பட்ட வழக்கை அஹமதாபாத் நீதிமன்றம் நேற்று தள்ளுபடிசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.