சகோதர, சகோதரிகளே எப்போதும், உண்மையே வெல்லும் என்பது, இயற்கையின் நீதி. 'வாய்மையே வெல்லும்' என்பது, நீதித் துறையின் நம்பிக்கை. இந்த நேரத்தில், என் மனதை பாதித்த சம்பவங்களை பற்றி, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.கடந்த, 2001ல், குஜராத்தில், மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. ஏராளமானோர் பலியாகினர்; நுாற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையே தொலைந்து விட்டது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நடுத் தெருவில் நின்றனர்.

ஒட்டு மொத்த வாழ்க்கையும் அழிந்து விட்டது.இந்த நேரத்தில், நினைத்து பார்க்க முடியாத வேதனையில், நான் பாதிக்கப்பட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய, மிகப் பெரிய பொறுப்பு, என் முன் இருந்தது. இது, மிகப் பெரிய சவாலான பணியாக இருந்தது.ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே,

2002ல், குஜராத்தில், மிக மோசமான கலவரம், திடீரென ஏற்பட்டது. அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள், நிர்கதியாகி, அனாதையாக நின்றன. பல ஆண்டுகளாக சிரமப்பட்டு நிறைவேற்றப்பட்ட அனைத்து திட்டங்களும், முடங்கி விட்டன.நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களையே சமாளிக்க முடியாத நிலையில், கலவரத்தால் ஏற்பட்ட சேதங்கள், மிகப் பெரிய பாதி்ப்பை ஏற்படுத்தின.

எப்போதுமே, ஒற்றுமையையும், வளர்ச்சியையுமே, நான் வலியுறுத்தி வருகிறேன். நான், மிகவும் விரும்பி்ய குஜராத் மக்களின் இறப்புக்கும், வேதனைக்கும், நானே காரணம் என, என் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால், நம் மனது, எந்த அளவு வேதனைப்படும் என, உங்களால் நினைத்து பார்க்க முடியுமா?

சிலர், தங்களின் அரசியல் லாபத்துக்காகவும், சுய நலனுக்காகவும், என்னை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த குஜராத் மக்களையும், நாட்டையும், களங்கப்படுத்தினர். கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பை, சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, மனசாட்சி இல்லாத அந்த நபர்கள், மீண்டும் குற்றம் சுமத்தினர்.இதுபோன்ற குற்றச்சாட்டுகள், எந்த அளவுக்கு, மன வேதனையை ஏற்படுத்தும் என்பதை, அவர்கள் உணரவில்லை. ஆனாலும், குஜராத்தில், வளர்ச்சி ஏற்படுத்துவதற்கான வழியில், தொடர்ந்து பயணித்தோம்.

ஒற்றுமையையும், நல்லெண்ணத்தையும் உருவாக்கினோம். இது, எளிதான காரியமாக இல்லை. ஆனாலும், உறுதியுடன் செயலாற்றி, ஒற்றுமையை ஏற்படுத்தினோம்.தினம், தினம், பயந்து அலறிய சூழ்நிலையை மாற்றி, குஜராத்தில், அமைதியை நிலைநாட்டினோம். இப்போதுதான், எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கான பெருமை, குஜராத்தைச் சேர்ந்த, ஒவ்வொரு மக்களையும் சேரும். கலவரம் ஏற்பட்டதும், அதை அடக்க, அமைதியை நிலை நாட்ட, குஜராத் அரசு, மிக வேகமாக செயல்பட்டது.

இதற்கு முன், எந்த அரசும், இப்படி செயல்பட்டது இல்லை.நேற்றையை தீர்ப்பில், கலவரத்தில் எனக்கு தொடர்பில்லை என, கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 12 ஆண்டுகளாக எரிந்த தீ, அனைக்கப்பட்டு விட்டது. இப்போது, சுதந்திரமான, அமைதியான நபராக, என்னை உணருகிறேன். நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில், எனக்கு துணையாக இருந்த, ஒவ்வொருவரையும், இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். என் மீதும், குஜராத் மக்கள் மீதும், பழி துாற்றியவர்கள், இனிமேல், அதை நிறுத்தி விடுவர் என, எதிர்பார்க்கவில்லை.ஆனால், இனியும், ஆறு கோடி குஜராத் மக்களை, அவர்கள் களங்கப்படுத்தக் கூடாது என்பது தான், என் வேண்டுகோள்.

இந்த தீர்ப்பை, என் சொந்த வெற்றியாகவோ, தோல்வியாகவே கருதவில்லை. என் நண்பர்களும், என்னை எதிர்ப்பவர்களும், இதேபோல் கருத வேண்டும். நாட்டில், ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், என் நோக்கம். இதுதான், அடித்தளமாக இருக்க வேண்டும். எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், புன்னகை சிந்திய முகங்களுடன், கைகோர்த்து, ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்.

நரேந்திர மோடி
குஜராத் முதல்வர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.