பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்கிறோம். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்தையொட்டி மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை தமிழர் பிரச்சினையில் இனப் படுகொலை நடந்ததாக மக்கள் தீர்ப்பாயமே தீர்ப்புசொல்லி உள்ளது. எனவே அங்கு நடந்த இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது.

அதனால் நடைபெற உள்ள பாராளுமன்றதேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி வைக்கிறோம். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

முதலில் தமிழகபொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்துபேசினோம். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து 1 மணிநேரம் பேசினேன். இந்த சந்திப்பின் போது மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

கடந்த 2011 தேர்தலில் மதிமுக. போட்டியிட வில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேவந்து விட்டோம். மீனவர்பிரச்சினை, தனிஈழம் பிரச்சினை, மதுவிலக்கு பிரச்சினைக்காக தொடர்ந்து மதிமுக. குரல்கொடுத்து வருகிறது.

இந்ததேர்தலில் மதிமுக. நிச்சயம் வெற்றிபெற்று ஈழத் தமிழர்களை காக்க அழுத்தம்கொடுக்கும் அளவுக்கு மதிமுக.வை மக்கள் வெற்றிபெற செய்வார்கள். பாரதீய ஜனதாவுக்கு ஆதரவுபெருகி வருகிறது.

மோடி அலை நாடுமுழுவதும் வீசுகிறது. அவர் பிரதமர் ஆவார். பா.ஜ.க.,வுடன் நாங்கள் நிபந்தனையின்றி கூட்டணிசேருகிறோம். நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. அவர்களும் நிபந்தனை விதிக்கவில்லை. எங்கள்கட்சி பொதுக் குழு பிப்ரவரி 4–ந் தேதி கூடுகிறது. அதில் பலமுக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தமிழக வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும், ஊழல்களையப்பட வேண்டும் இதுவே எங்கள்கொள்கை. முதலில் ஈழத்துக்கு துரோகம்செய்யும் காங்கிரஸ் ஆட்சிக்குவரக்கூடாது.

காங்கிரஸ்செய்த தவறை பா.ஜ.க தலைவர்கள் செய்யமாட்டார்கள். அதற்கு வாய்ப்பேவராது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் என்னென்ன அடிப்படைதேவைகள் அவசியம் என்பது பற்றி 3 மாதத்துக்கு முன்பே ஆய்வுப்பணியை தொடங்கிவிட்டோம்.

சமீபத்தில் நான் தமிழகம் முழுவதும் பிரசாரபயணம் மேற்கொண்டேன். எப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பு இருந்தது. பிரசார பயணத்தின் போது வழியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தேன். இது ஒரு அரசியலில் ஆரோக்கியம் என்று நிருபர்களிடம் கருத்துதெரிவித்தேன். அதைத்தவிர வேறொன்றும் இல்லை.

சேதுசமுத்திர திட்டத்தில் முன்பு சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கருத்து எழவில்லை. எனவேதான் நாங்கள் இந்ததிட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டோம். ஆனால் தற்போது சுற்றுச்சூழல் பற்றியகருத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும், மீனவர்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது. பச்சோரிகமிஷன் அறிக்கையும் சுற்றுச் சூழல் பற்றி கவலைதெரிவித்து இருந்தது. எனவே சேதுசமுத்திர திட்டம் மறு பரிசீலனைக்கு உட்பட்டது தான் என்றார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.