கடந்த ஆண்டில் தனக்கு கிடைத்த பரிசுகளை குஜராத் அரசு கஜானாவில் 1-1-2014 அன்று ஒப்படைத்தார் திரு.நரேந்திரமோடி. மொத்தம் ரூபாய் 26.54 லட்சம் மதிப்புள்ள 3,064 பரிசுப்பொருட்கள். தங்கம், வெள்ளி என 103 கலைப்பொருட்களுடன் (ரூ14.81 லட்சம் மதிப்பு), ரதங்கள், நாணயங்கள், வாட்ச்கள், மெடல்கள் போன்றவையும் அடங்கும். இது 13வது ஆண்டு.

இவை ஏலம் விடப்பட்டு பணம் அரசுக்கு சேர்க்கப்படும். ஏலத்தேதி விரைவில் அறிவிக்கப்படும். சுழற்சி முறையில் குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது.

நவ.2001 முதல் டிச. 2013 வரை ஆண்டுதோறும் ஒப்படைத்து வருகிறார்.
இதுவரை 15,464 பொருட்கள் ஏலம் விடப்பட்டு ரூ.18.91 கோடி அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு உள்ளது.

2G, CWG, நிலக்கரி, ஆதர்ஷ் என மக்கள் பணத்தை சுரண்டும் மன்மோகன்சிங் அரசு எங்கே? தனக்கு கிடைத்த பரிசுகளை 13 ஆண்டுகளாக தவறாமல் அரசு கஜானாவில் சேர்க்கும் இவர் எங்கே?

இந்த மன்மோகன்சிங்தான் மோடி பிரதமரானால் நாட்டிற்கு பேரழிவு என்கிறார். சிந்தியுங்கள் நண்பர்களே!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.