இந்திய அளவில் மோடி அலை நன்றாகஉள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. பிப்ரவரி மாதம் 15ந்தேதிக்குள் குஜராத் முதல்வரும், பாஜக. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகைதருமாறு அழைத்துள்ளோம் என்று பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க., சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ் தலைமை தாங்கினார்.

பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:–

தமிழகத்தில் ‘வீடு தோறும் மோடி’, ‘உள்ளம் தோறும் தாமரை’ என்ற நிகழ்ச்சி தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்தநிகழ்ச்சி வருகிற 12ந் தேதிக்குள் முடிவடைந்துவிடும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் சர்தார் வல்லபாய்படேல் இரும்புசிலை 597 அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரும்புசேகரிக்கும் பணி நடந்து வருகிற 28ந் தேதிக்குள் முடிவடைகிறது. 28ந்தேதி சென்னையில் இருந்து குஜராத்திற்கு லாரிகள்மூலம் இரும்புகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

வருகிற 31ந் தேதி தமிழகத்தில் மீனவர்களின் துயர்தீர்க்கும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ராமேசுவரம் பாம்பனில் கடல்தாமரை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுஷ்மாசுவராஜ் கலந்து கொள்கிறார்.

இந்திய அளவில் மோடி அலை நன்றாக உள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. பிப்ரவரி மாதம் 15ந் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி வருகிற பாராளுமன்றதேர்தலில் தோல்வி அடையும். 100 தொகுதிகளில்கூட கண்டிப்பாக அவர்களால் வெற்றிபெற முடியாது. இதன் காரணமாகவே பிரதமர் மன்மோகன் சிங், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை எனக்கூறி உள்ளார். அவரின் விலகல் நாட்டிற்கு நல்லதுதான். ஏனென்றால் அவர் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாகதான் இருந்துள்ளார். அவர் நல்லமனிதர், திறமை படைத்தவர்தான். ஆனால் செயல்பட முடியாமல் இருந்துவிட்டார்.

பாஜக. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பாமக.வுடன் ஏற்கனவே பேசி உள்ளோம். மதிமுக.வுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம். தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்குவரும் என நம்பிக்கை உள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தமிழத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவுகேட்க உள்ளோம். இதனால் பலமான அணியாக தமிழகத்தில் பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.