எனது தாய்நாட்டிற்கு சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை என பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார்.

டில்லியில் யோகாகுரு பாபா ராம்தேவ் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் பாஜக.,தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தகூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: 2014ம் ஆண்டு தேர்தல் பழைய மரபுகளை தகர்த்தெறியும்.மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. நமது நாட்டின் கவுரவத்தைமீட்க போராட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்எல்வி., ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். தற்போது முதல்முறையாக சாதாரண மக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்றைய நிலையை நான் அடைவதற்கு நான்கடுமையாக உழைத்துள்ளேன். இன்று டீவிற்பனை செய்பவர் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மாறியுள்ளார்.

எதையும்கெட்டதாக பார்க்கும் எண்ணம் எனக்கில்லை. அதேநேரத்தில் மத்திய அரசை பற்றி நல்ல விதமாக பேசுவதற்கும் எதுவும் இல்லை. எனது தாய்நாட்டிற்கு சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். ஏமாற்றம் என்ற வார்த்தை எனது அகராதியில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் நடத்தப்படுகிறது. முதன் முறையாக பல உண்மையான விவகாரங்கள்குறித்து பேசுகிறோம். காங்கிரசாரின் உண்மையான குணத்தை ராம்தேவ் நன்கு அறிவார். ராம்தேவ் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துசெல்கிறார்.

நமது நாட்டில் மரம்வளர்க்க தேவையான இடம் உள்ளது. வெளி நாட்டிலிருந்து மரக் கட்டைகள் இறக்குமதி தேவையில்லை. நாட்டின் தற்போதைய நிலையை நம்மால் மாற்றமுடியும். வாஜ்பாய் ஆட்சியில் விவசாயிகளுக்காக பலதிட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நவீன முறைகள் விவசாயத்தில் வருமானத்தை அதிகரித்துள்ளது. கட்சிகள் மீது அழுத்தத்தைகொடுக்க மக்கள் விரும்புகின்றனர்.

இயற்கைவளங்களை ஒதுக்கீடுவதில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இயற்கைவளங்களை ஏலத்தில் விடுவதற்கு அரசு தடைவிதிக்கிறது. நமது நாட்டிலிருந்து மணல் கடத்தப் படுகிறது. வரிவிதிப்பதற்கு உரிய கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். நமது நாட்டிற்கு வெறும்வாக்குறுதிகள் தேவையில்லை. சிறந்தசக்தி தேவைப்படுகிறது. நாட்டை வழிநடத்தி செல்வதற்கான சக்தி நம்மிடம் உள்ளது. மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். இந்தியமொழிகளை நாம் முன்னெடுத்துசெல்ல வேண்டும். நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமைப்படவேண்டும் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.