'இராமன்' என்பதை ஒருகற்பனை கதாபாத்திரமாக வைத்துக் கொண்டால் கூட இப்படி ஒருகாவியமாக அதனைப் படைத்து அந்த இதிகாசத்தை கொண்டாடும் ஒருசமுதாயம் எவ்வுளவு பண்பட்ட சமுதாயமாக இருந்தால்மட்டுமே அது சாத்யம் என்பதை இன்றைய பகவத்துவேஷிகள் சிந்திக்கட்டும்.


ராமன் மது அருந்தினான் என்று ராமாயணம்கூறுகிறது என்கிறார்.ஆனால் அது எந்தவிதமாகக் கூறப்பட்டிக்கிறது? சீதையிடம் பேசும் அனுமன், "தேவி! தங்களைப்பிரிந்த சோகத்தால் ராமன் மதுவைக் கூட அருந்துவதில்லை "என்று கூறுகிறான்.இதிலே ராமன் ஒரு உத்தமகணவனாக சித்தரிக்கப் படுகிறான்.மனைவியைப்பிரிந்த சோகத்தால் மதுவையும் அருந்துவதில்லை என்றுதான் ராமாயணம் கூறுகிறது.

அருந்தவில்லை என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர குடித்துக்கெட்டான் என்று சொல்லப்பட வில்லை.காதலியை பிரிந்தசோகத்தினால் பாட்டில் பாட்டிலாகக் குடித்துவிட்டு போதையில் கதாநாயகன் உருகுகிறான் என்ற சினிமாவுக்கு கதை அமைக்கிறவர்களும்,சினிமா எடுத்தே சிம்மா சனத்தைப் பிடித்தவர்களும் இந்த இடத்தில் சிந்திக்கவேண்டும்.சோகமும் ராமனை மதுவைக் கைவிடும் படித்தான் செய்த்தது.

எப்படியோ முன்னொருகாலத்தில் குடித்தான் என்றாவது சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? என்று கேட்கிறார்கள் வக்கிரமாய்பேசும் கொக்கரிப்பாளர்கள்.ராமன் க்ஷத்ரியவர்ணத்தில் பிறந்தான்.அந்த வர்ணத்துக் குரிய உணவு,உடை,வாழ்க்கைமுறை,முதலியவற்றைக் கடைபிடித்தான்.அவன் வராஹ அவதாரம் எடுத்த போது பன்றி போல் கிழங்குகளைத் தின்னவில்லையா? நரசிம்மமாய் அவதரித்தபோது இரண்யனின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கவில்லையா? அதுபோல  இதுவும்.நாய்வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்.நரிவேஷம் போட்டால் ஊளையிட வேண்டும்.ராம நாடகத்தின் பின்னணித்தத்துவம் இதுதான்.

இதைப் புரிந்து கொள்ளாமல் இந்தியர்க்கு அகில உலக அந்தஸ்தை அள்ளித் தரும் ஒரு இதிகாசத்தை அவமானப்படுத்துவது அறியாமை.குடிக்கிறவன் என்பதற்கும், குடிகாரன் என்பதற்கும் வேறுபாடு உண்டு. வார்த்தைகள் பிறழ்ந்துபோனால் பொருள் மாற்றம் என்பதை விட ,அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்பைப் பற்றித்தான் சிந்திக்கவேண்டும்.குட்டக் குட்டக் குனியும் தமிழ்நாட்டு ஆத்திக சமுதாயம் கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி என்ற வாக்கியத்தை காலத்தின் கோலமாக எண்ணி காணாக் கண்ணிட்டுப் புறக்கணித்தது.

ஆனால் உயர்குணங்களின் உறைவிடமாக,முழு நாகரீகத்தின் முன்னோடியாக, எத்தனையோ இதயங்களின் எண்ணவிளக்காக, ஒளிரும் ஸ்ரீராமச் சந்திரனைப் பற்றி அவதூறானசொற்கள் வழங்கப்பட்டால் இது சாந்த மூர்த்திகளையும் உக்ரசிங்கங்களாக மாற்றி விடும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அடித்தால் பொறுத்துக் கொள்ளலாம்,கடித்தால் சும்மா இருக்கமுடியுமா? ஜெய் ஸ்ரீராம்!!!

நன்றி; அந்தோனி ஜோசப்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.