பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 66வது பிறந்த நாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, சொந்த ஊரான காந்தி நகர் சென்று, தாய் ஹிராபாவிடம் ஆசிபெற்றார்.

குஜராத்மாநிலம் ரெய்சான் பகுதியில் சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் 97 வயதான ஹிராபா தங்கியுள்ளார். இன்று காலை சகோதரர் வீட்டுக்குச்சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தனது தாயிடம் ஆசிபெற்று, அவருடன் 25 நிமிடங்கள் பேசி மகிழ்ந்தார். பிறகு அங்கிருந்து கிளம்பி ராஜ்பவன் வந்தார்.

1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம்தேதி பிறந்த மோடிக்கு இன்று 66 வயது ஆகிறது. இதனை முன்னிட்டு ராஜ்பவனில் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தனது  பிறந்தநாளை பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.

Leave a Reply