நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.,வுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையேதான் போட்டியாம் காங்கிரஸ் கட்சி களத்திலேயே இல்லையாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒருபக்கம் பாஜக. அணியில் ஊழல் குற்றச் சாட்டு நபர்கள் இருக்கிறார்களாம் . ஆனால் மற்றொரு பக்கத்தில் நேர்மையான அரசியலை நடத்தும் ஆம் ஆத்மி உள்ளதாம். அதாவது காங்கிரஸ் போன்ற ஊழல் விசக் காளான்களுக்கு மாற்றாக முளைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் இந்த ஆம் ஆத்மி காளான் முளைத்து மூன்று இளை கூட விடவில்லையே அதற்குள் தங்களை பற்றி ஆருடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்,

பாஜக., வின் முப்பது வருட அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம், காங்கிரசின் அறுபது வருட ஆட்சி அதிகாரத்தில் பலநூறு தவறுகள் நடந்திருக்கலாம் , ஆனால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து பதினைந்து நாட்களுக்குள் எத்தனை எத்தனை வாக்குறுதி மீறல்கள் (என் குழந்தைகள் மீது சத்தியமாக காங்கிரஸ் மற்றும் பிஜேபி யுடன் கூட்டணி வைக்க மாட்டோம் ), நிர்வாக குளறுபிடிகள் (ஜனதா தர்பார் என்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் திரண்ட சில ஆயிரம் கூட்டத்தை கண்டு அஞ்சி அந்த கூட்டத்தை ஒரேடியாக ரத்து செய்துள்ளார்கள் , இனி ஜனதா தர்பாரே கிடையாதாம் ) , அதிகார போட்டிகள்(தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்), ஒட்டு மொத்த தேச பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவான காஷ்மீர் கொள்கைகள், வேற்று விளம்பரங்களுக்காகவே சிறப்பு திட்டங்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.இப்பொழுது இவர்களின் நிர்வாகத்திறமை 0.00%….. ஊழலுக்கு எதிரான போராட்டம்… 0.00% …. நம்பகத்தன்மை 0.00% …… எளிமை 0.00%… தேசபற்று 0.00%… மக்கள் நலன் 0.00%…. விளம்பரம் மட்டுமே 100.00% என்று கூறலாம்.

காங்கிரஸ் என்ற ஊழல் விசக்காளானுக்கு எதிராக முளைத்திருப்பதாக கூறிக்கொண்டு முளைத்திருக்கும் ஆம் ஆத்மி என்ற காளான் , ஊழல் விசக்காளனுடன் அல்லவா கலப்பினம் கொண்டு ஆட்சி புரிந்திரிக்கிறது. இவர்களிடம் இருந்து நல்ல ஒரு புது இனத்தைதான் எதிர்பார்க்க முடியுமா? அல்லது நல்ல ஆட்சியைத்தான் எதிர்பார்க்க முடியுமா?. ஆயிரம் பேருக்கு சிகிச்சை தந்து 900யிரம் பேரை கொன்றவன் வேண்டுமானால் மோசமான மருத்துவனாக இருக்கலாம், ஆனால் ஒருவருக்கு கூட சிகிச்சையை ஆரம்பிக்காமல் தன்னை நல்ல மருத்துவனாக மக்களிடம் வெற்று விளம்பரம் செய்பவன் மிக மிக மோசமான மருத்துவனே.

மக்கள் விழிப்புணர்வு பெரும் வரை?, கண்மூடி தனமாக நம்பும் வரைதான் இவர்களது விளக்கமாறு இவர்களை காக்கப்போகிறது . பிறகு அது இவர்களை தாக்கத்தான் போகிறது.

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.