இது வரை தலைவர்களை தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் என்னை ஒரு சேவகனாக தேர்ந்தெடுங்கள்; என்னை வெற்றி பெறச்செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்குவட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித்தருவேன் என்று பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

விரைவில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பிரசாரத்த்திற்காக , மூன்று மாதங்களுக்கு முன்பே, மும்முரமாக இறங்கியுள்ள, நரேந்திர மோடி, நாடுமுழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக உ.பி., மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான, கோரக்பூரில், நேற்று நடந்த, பிரமாண்டமான, பாஜக., தேர்தல்பிரசார கூட்டத்தில், மோடி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

7 லட்சம் பேர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், மோடி பேசியதாவது: பொதுக்கூட்ட மேடைக்கு நான் ஹெலிகாப்டர் மூலம் வந்தபோது கடல்போல் மக்கள் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது. இது மக்களின் கடல் .இந்த தொலை தூரப்பகுதியிலும் என் பேச்சைக்கேட்க இந்த அளவுக்கு கூட்டம் வருகிறதென்றால், காற்று திசைமாறி அடிக்கிறது என்றுதானே பொருள். காங்கிரசிடமிருந்து இந்தியர்கள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்பதையே இதுகாட்டுகிறது. கடந்த டிசம்பர் 15ம்தேதி, சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்த நாளன்று நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்ற உ.பி., இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். உ.பி.,யின் ஒவ்வொருபகுதியிலும் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஊர்வலம் ஒரு உலகசாதனையாக உள்ளது. ஒரு நோக்கத்துக்காக, 50 லட்சம்பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். பட்டேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய சிலை நிறுவப்படும்; அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட இரு மடங்கு உயரம் இருக்கும். நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் தங்களுடைய பழைய உழவு கருவிகளை இதற்காக வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தல்களில் 4ல் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. தலித்களையும் பழங்குடியினரையும் முக்கியமானவர்களாக எவரும் கருதுவதே இல்லை; அவர்களை வெறும் ஓட்டுவங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர். 4 மாநிலங்களிலும் பாஜக., பெரிய பெரும்பான்மையில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானில் 34 தனித் தொகுதிகளில் பாஜக., வென்றுள்ளது; காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

சட்டிஸ்கரில் 10 தனித்தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. தலித்களும் பழங்குடியினரும் தற்போது பாஜக., மீது நம்பிக்கை வைத்துள்ளனர், இந்நாடு, ஏழை நாடல்ல; இந்தசெழிப்பான நாட்டின் மக்களை, காலங்காலமாக, காங்கிரஸ் கட்சி, ஏழைகளாகவே வைத்துவிட்டது. அரசியலுக்காக அவர்கள், இவ்வாறு செய்துவருகின்றனர். காங்கிரஸ் ஏழைகளைப்பற்றி பேசுகிறது; ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே அவர்களை பற்றி நினைக்கிறது. ஏழைகள்குறித்து காங்கிரசார் பல ஆண்டுகளாக பேசிவருகின்றனர்; ஆனால் ஏழைகளின் நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

60 ஆண்டு காலமாக மாற்றம் அடையாத நிலை குறித்து என்னுடைய கருத்து இதுதான்: ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில் தான் காங்கிரசின் எதிர் காலம் இருக்கிறது.தலித், பழங்குடியின மக்கள், பாஜக.,வுக்கு எதிரானவர்கள் என, பிரசாரம்செய்து வந்த காங்கிரஸ், நடந்துமுடிந்த, நான்குமாநில சட்ட சபை தேர்தல் முடிவைப் பார்த்து, கலங்கி போயுள்ளது. நலிவடைந்த சமுதாயமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்களுக்கு, 60 மாதம் ஆட்சிசெய்ய அனுமதி தாருங்கள். உங்கள் நிலையை மாற்றி காண்பிக்கிறேன்.ஏழ்மை என்பதே, காங்கிரசாருக்கு, என்னவென்றுதெரியாது. இந்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல, பாஜக.,வால் தான் முடியும். மத்தியில், பாஜ., ஆட்சி அமைய, ஓட்டளியுங்கள்.

ஓட்டுவங்கி அரசியலால், இத்தனை ஆண்டுகளும், ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட காங்கிரஸ், இந்த முறை, பலத்த அடி வாங்கப்போகிறது. பாஜக., வளர்ச்சியை அடிப்படையாககொண்டு, மக்களை சந்திக்கிறது. நல்லநிர்வாகம் இல்லாமல், எந்தவளர்ச்சி திட்டங்களையும் செய்துவிட முடியாது.அதனால்தான், 60 மாதங்கள் மட்டும் ஆட்சிசெய்ய அனுமதி தாருங்கள் என, நான்கேட்கிறேன். காங்கிரஸ் கட்சி, தலித் மக்களையும், நலிவடைந்த மக்களையும், தன் சட்டைபாக்கெட்டில் வைத்திருப்பதாக கூறுகிறது. ஆம்… அவர்களை, மனிதர்களாக பாவிக்காததால்தான், அவர்களை, காங்கிரஸ் தன் சட்டைப்பையில் வைத்திருக்கிறது.

ஒரு டீ விற்பனையாரை காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நமது வறுமையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் பலன் அடைய நினைக்கிறது. ஏழைகளை ஓட்டுவங்கியாக கருதும் ஒரு கட்சியை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இது வெறுமனே ஒரு டீ விற்பனையாளரின் பிரச்னை மட்டுமல்ல. 5 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர். இது ஏழைகளை கிண்டல் செய்வதல்லாமல் வேறு எப்படி எடுத்துக் கொள்வது? ஏழைகள் சிரமப்பட்டு வாழமுடியாமல் உயிர் விடுகின்றனர். மத்தியிலும் உபி.,யிலும் உள்ள அரசுகள், வறுமையைப்போக்க அக்கறை காட்டுவதில்லை. இங்குள்ள இளைஞர்களுக்குத் தேவையானது கிடைத்தால் அவர்கள் ஏன் தங்களுடைய நிலத்தையும் பெற்றோரையும் விட்டுவிட்டு குஜராத்துக்கு வருகி்னறனர்? உ.பி.,யி்ல் கடவுள்கொடுத்த வளங்கள் ஏராளமாக உள்ளன. முயன்றால் 10 ஆண்டுகளில் இதர மாநிலங்களை உ.பி.மிஞ்சிவிடும்

தற்போது தந்தையும் ( முலாயம் சிங்) மகனும் ( அகிலேஷ்) என்னைப் பின் தொடர்ந்து வருகின்றனர். காசியில் அவர்கள் இருவரும் எனக்கு சவால்விட்டுள்ளனர். உ.பி.,யை குஜராத்தாக மாற்ற மோடியால் முடியாது என்று சவால்விட்டுள்ளனர். நேதாஜியே ( முலாயம்) உங்களுக்கு குஜராத்தாக மாற்றுவதென்றால் என்னவென்று தெரியுமா? ஒவ்வொருகிராமத்திலும் 24 மணி நேரமும் மினசப்ளை கிடைக்கவேண்டும். உண்மைதான். இது உங்களால் முடியாது. அதற்கு 56அங்குல மார்புதேவை. கடந்த 10 ஆண்டாக குஜராத் வளர்ந்துள்ளது; வளர்ந்துவருகிறது. உங்களால் இதுமுடியாது. நீங்கள் உ.பி.,யை குஜராத்தாக மாற்றினால், குஜராத்மக்கள் உ,பி.,யைத் தேடி வருவார்கள். நீங்கள் பெண்களை மதிப்பதில்லை; அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதும் இல்லை. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் உ.பி.,யிலிருந்து அது அகற்றப்பட வேண்டும். நம்மிடம் கால்நடைகள் உள்ளன; மனிதர்கள், தண்ணீர், உணவு எல்லாமே இருக்கிறது. அப்படியானால் வெளியிலிருந்து ஏன் பால இறக்குமதி செய்யவேண்டும்? குஜராத்தில் உள்ளதுபோல ஒரு அமுல் பால்பண்ணையை இங்கு உருவாக்கமுடியாதா? நமது நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். உரங்களை பெறுவதற்காக விவசாயிகள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; உரமூடைகளை வைத்துள்ள கிடங்குகளோ மூடிக் கிடக்கினறன.

நாடு முன்னறேவேண்டும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை; பாஜக., மட்டுமே முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்ததேவைகளை பாஜக.,வால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியம்.பள்ளித்தேர்வுகளை உரியநேரத்தில் நடத்த முடியாத மாநில அரசு, கிடங்குளையும் தொழிற்சாலைகளையும் நடத்தமுடியாது. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால், இளைஞர்கள் ஆண்டுகளை இழக்கின்றனர். இந்தபிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். விவசாயத்தை நாம் பாரம்பரிய விவசாயம், கால்நடைபராமரிப்பு, மரம்வளர்த்தல் என மூன்றாக பிரிக்கவேண்டும்; இதற்கு சரியான சிந்தனை, நோக்கம், தலைமைதேவை.தற்போதைய அரசு சின்னசின்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. நமது நாடு ஏழ்மையான நாடு அல்ல; நமதுநாடு செழுமையான நாடு; மக்களும் செழி்ப்பாக இருக்கமுடியும். இதற்கான முடிவை 2014 தேர்தலில் நாம் எடுத்தாக வேண்டும். தங்களுடைய குழந்தைகள் வேலைதேடி வெளியிடங்களுக்குச் செல்லும்போது, பெற்றோர் கவலைப்பட வேண்டிவரும்.

நீங்கள் கடந்த 60 ஆண்டாக உங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் 60 மாதந்தான். எனக்கு 60 மாதம் மட்டுமேகொடுங்கள்; நீங்கள் இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்; இப்போது ஒருசேவகனை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய கனவுகளைப் பூர்த்தி செய்கிறோம். இன்று சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாள். நீங்கள எனக்கு ரத்தம்கொடுங்கள்; உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன் என்று அவர் கூறினார். நான 60 மாத ஆட்சி மட்டுமே கேட்கிறேன். நான் உங்களுக்கு மகிழ்ச்சியை, அமைதியான வாழ்க்கையை தருகிறேன். நாம் உலகோடுபோட்டியிட விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆதரவுதேவை. நீங்கள் என்னை வெற்றி பெறச்செய்தால், உங்கள் அன்பிற்கு வளர்ச்சி என்ற வட்டியைச் சேர்த்து திருப்பித்தருவேன்.இந்த நாட்டையே, குஜராத் போல் மாற்றிக் காட்டுகிறேன்.எத்தனையோ தேர்தல்களை சந்தித்துவிட்டோம். ஆனால், இது, வித்தியாசமான தேர்தல். இந்த நாட்டின் எதிர்காலத்தை மக்கள் முடிவுசெய்து விட்ட தேர்தல். காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும், மக்கள் பிரியாவிடை அளிக்கும் தேர்தல் இது.இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply