தனியார் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போது தேர்தல்நடந்தால் பாஜக., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 211 முதல் 231 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 107 முதல் 127 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் பாஜக.,தனிப்பட்ட முறையில் 192 முதல் 210 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 92 முதல் 108 தொகுதிகள் வரையிலும் வெற்றிபெறும் எனவும் தெரியவந்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மியின் அலை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பின்னுக்குத்தள்ளி, தேசிய அளவில் நரேந்திர மோடி அலையால், பாஜக வரும் 2014 பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று இந்தியாடுடே குழுமம் எடுத்துள்ள கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி,

காங்கிரஸ்கூட்டணி தற்போதைய இடங்களில் இருந்து சுமார் 150 இடங்கள் வரை குறைவாக பெற்று, 100 இடங்கள் வரை பெறக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் தென்னகத்தில் படுதோல்வியைத் தழுவும் என்றும். மோடி அலை, பீகாரில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தும் என்றும். மோடி அலையால் மேற்கு இந்தியப் பகுதியில் 85 சதவீத இடங்களை தே.ஜ.கூட்டணி பெறும் என்றும் , மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி, தற்போதைய ஐ.,மு.கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றும் என்றும் தெரியவருகிறது. 2010க்குப் பிறகு 200 இடங்கள் என்ற அளவை தேஜ.கூட்டணி தாண்டக்கூடும் என்றும் . தே.ஜ.கூட்டணிக்கு 34 சதவீத வாக்கும், ஐ.மு.கூட்டணிக்கு 23 சதவீதமும், மற்ற கட்சிகள் 43 சதவீத வாக்குகளும் பெறும் என்றும் தெரிகிறது.

இந்தியாவிலே அதிக எம்.பி. தொகுதிகளை (80) கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரசுக்கு 4 இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதற்கு மாறாக உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 49 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆளும்கட்சியாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். ஆனால் அவருக்கு 15 இடங்கள்வரையே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிக்கும் 15 இடங்களில் தான் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் பாஜக.வுக்கு அதிக இடங்களை பெற்றுக்கொடுப்பதாக இருக்கும் என்று கருத்துகணிப்புகள் மூலம் தெரிகிறது.

பாரதீய ஜனதா கட்சிக்கு கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 10 இடங்களே கிடைத்திருந்தது. அது வரும்தேர்தலில் 4 மடங்கு உயர்வதால் பாஜக. அந்த மாநிலத்தில் அதிக இடங்களில் லாபம் பெறும்.

பீகார் மாநிலத்திலும் பாஜக. அதிக இடங்களில் அதாவது 22 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.