டீ விற்பவர்களை இழிவுபடுத்தும் மணிசங்கர் அய்யர் போன்ற அராஜக காங்கிரஸ் தலை வர்களுக்கு வரும் நாடாளுமன்ற தோ்தலில் மக்கள் சரியானபாடம் புகட்டுவார்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ்கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், நரேந்திரமோடி பற்றி கடுமையாக விமர்சித்தார். “மோடி பிரதமராக முடியாது. காங்கிரஸ்கமிட்டி கூட்டத்தில் வந்து டீ விற்கலாம், அதற்கு வேண்டுமானால் இடம் ஒதுக்கித்தருகிறோம்” என்று அவர் பேசியது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மோடியை பிரபலப் படுத்தும் வகையில் மோடி பெயரில் டீ கடைகளை திறந்து பொது மக்களின் ஆதரவைப்பெறும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளது.

அந்தவகையில், ஆந்திர மாநிலம் விஜய வாடா அருகிலுள்ள காந்திநகரில் டீ கடையை தொடங்கிவைத்து பாஜக தனது நாடாளுமன்ற தோ்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு டீக்கடையை திறந்துவைத்தார்.

அப்போது பேசிய அவர் “நான் என் வாழ்க்கையில் முதன் முறையாக டீ குடிக்கின்றேன். இதற்கு முன் டீகுடித்ததில்லை. மோடி குறித்த மணிசங்கர் அய்யரின் கருத்து நாட்டில் பலருக்கு சுய வேலை வாய்ப்பை அளித்து வரும் டீ விற்கும் அனைவரையும் இழிவு படுத்துவதாகும். காங்கிரஸ் இதற்கு கண்டனம் தெரிவிக்காமல் ஆதரித்தது.

டீ விற்பவர்களை இழிவு படுத்தும் மணிசங்கர் அய்யர் போன்ற அராஜக காங்கிரஸ் தலைவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தோ்தலில் மக்கள் சரியானபாடம் புகட்டுவார்கள். 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சியின்பலன் சாதாரணமக்களை சென்றடையவில்லை. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களா கின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகவே இருக்கின்றனர். இது மாற்றப்படவேண்டும்.” என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.