உ . பி., மாநிலம் மீரட்டில் நடந்த ‘விஜய்சங்னாத்’ கூட்டத்தில் பங்கேற்று பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசுகையில், ‘ தியாகிகளை நினைத்துபார்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது. இவர்களின் தியாகத்தை அவமானப்படுத்துகிறது, நான் ஹெலிகாப்டரில் வரும்போது மக்கள்வெள்ளம் செங்கடலாக இருப்பதை பார்த்து வியந்துபோனேன். 1857 புரட்சிக்கு இந்த மீரட்நகர் முன் மாதிரியாக இருந்தது. இங்கு பல்வேறு தியாகிகள்

உருவாகியுள்ளனர். சுவாமி தயானந் சரஸ்வதி போன்ற பல்வேறு தியாகங்களை காங்கிரஸ் அரசு மதிக்க தவறிவிட்டது. அவர்களை கேவலப்படுத்தும் செயலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இறங்கியுள்ளது.

தியாகிகள் குறித்து தவறானதகவலை தருகிறது. இங்கு ஆளும்மாநில அரசு முறையான மின்சாரம் வழங்க தவறிவிட்டது. அனைவருக்கும் தங்கு தடையற்ற மின்சாரம் என்பது மக்களின் கனவாகத் தான் உள்ளது. விவசாயிகள் , ஏழைமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரம் என்பது விஷத்தை போன்றது என்று ராகுல்காந்தியிடம் சோனியாகாந்தி கூறியிருந்தாராம். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் யார்? யாருடைய வயிற்றுக்குள் இந்தவிஷம் சென்றுள்ளது? யார் அந்த விஷத்தை விதைத்து அறுவடை செய்கிறார்கள்? விஷத்தைவிதைத்ததும், அதை உமிழ்வதும் காங்கிரஸ் கட்சிதான்”

வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பதில் மத்திய அரசும் , மாநில அரசும் ஒரேபாதையில் தான் செல்கின்றன . சமாஜ்வாடிகட்சி மக்கள் விரோதகட்சி. இது சமாஜ்வாடிகட்சி அல்ல சமாஜ் விரோதி கட்சி. இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுகிடக்கிறது. இது வேதனை தருவதாக உள்ளது. இங்குள்ள பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. இங்கு கலவரம் நாளுக்கு நாள் கணிசமாக பெருகிவருகிறது. சமாஜ்வாடி அரசு வளர்ச்சிபணிக்கு தேவையான நடவடிக்கையுடன் செயல்படவேண்டும். ஓட்டுவங்கி அரசியல் நடத்த வேண்டாம். கடந்த ஒரு மாதத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 1. 5 லட்சம் பதிவாகியுள்ளது. குஜராத்மக்கள் இப்போது அமைதியான சூழலில் வாழ்கின்றனர். அங்கு இப்போது துளிகூட கலவரம் இல்லை. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேசத்திலும் கலவரமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவேன்

ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து சோதனையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் உலகளவில் இந்தியாவுக்கு அவபெயர் ஏற்பட்டுள்ளது” என்றார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.