நேரடி அன்னிய முதலீடு குறித்து   மேல்சபையில் டிசம்பர் 6,7 தேதிகளில் விவாதம் சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என கோரி பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் எதிர்க் கட்சிகள் முடக்கின. இதைதொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம்நடத்த சபாநாயகர் மீராகுமார் அனுமதி தந்தார் .

மேலும் இது தொடர்பாக மேல்சபையில் 168-வது விதியின்கீழ் விவாதம் நடத்த சபாநாயகர் ஹமீத் அன்சாரி அனுமதி தந்துள்ளார். வரும் டிசம்பர் 6,7 தேதிகளில் இந்தவிவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதைபோன்று பாராளுமன்றத்தில் 184-வது விதியின்கீழ் ஓட்டெடுப்புடன் கூடியவிவாதம் டிசம்பர் 4,5 தேதிகளில் நடை பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply