மத்திய அரசில் மறு ஓட்டு எண்ணிக்கைமந்திரி என ஒருவர் உள்ளார். தேர்தலில்தோற்ற அவர், மறு ஓட்டு எண்ணிக்கையில் ஜெயித்தவர். இவர் அகங்காரத்தின் உச்சியில் பேசிவருகிறார். என்னை பற்றி தவறாக பேசிவருகிறார்.

இருப்பினும் நான் அமைதியாக உள்ளேன். மோடியின் பொருளாதார அறிவை ஸ்டாம்பில் எழுதிவிடலாம் என கூறியுள்ளார். ஸ்டாம்ப் ஒட்டினால்தான் போஸ்டர் சென்றுசேரும். நான்என்னுடையே செயல்பாட்டின் மூலம் நிருபித்துள்ளேன். காங்கிரசில் அரசில் பிரதமர் ஒருபொருளாதார நிபுணர். நிதியமைச்சர் தானும்,பொருளாதார நிபுணர் என நினைக்கிறார்.

பிரதமர், நிதியமைச்சர் வெளிநாடுகளில் சென்றுபடித்தவர். நான் அரசுப்பள்ளியில் படித்தவன். அவர்களின் சவால்களை ஏற்றுக் கொள்கிறேன். நாட்டை உருவாக்குவது ஹார்வர்டா அல்லது ஹார்ட் ஒர்க்கா. நான் கடினமான உழைப்புமூலம் வந்தவன். தே.ஜ.,ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி6.8 சதவீதமாக உள்ளது. ஆனால் ஐ.மு., அரசில் கடந்த 2012ம் ஆண்டில் 4.6 சதவீதமாக உள்ளது. . இதுதான் உங்கள் வளர்ச்சியா? குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரவளர்ச்சி -4.8 சதவீதமாக இருந்தது எங்களின் பொருளாதார அறிவை வைத்து நாங்கள் சாதித்துள்ளோம். நாட்டின் சராசரிவளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சி 10.6 சதவீதமாக இருந்தது. நாட்டின்கடன் 50லட்சம் கோடியாக உள்ளது. இதுநாட்டின் வருமானத்தில் 50 சதவீதமாகும் என மோடி சென்னைகூட்டத்தில் பேசினார்.

Tags:

Leave a Reply