மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்தபதில், நரேந்திர மோடியின் விமர்சனத்தை உறுதிப் படுத்துகிறது . முதலில் தோல்வி என்றும், பிறகு வெற்றிஎன்றும் அறிவிக்கப்பட்டதன் மர்மம் விசாரணையில் தெரியவரும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது :

சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நரேந்திர மோடி நாகரிகமான முறையில் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என விமர்சனம்செய்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மறுவாக்கு எண்ணிக்கைக்குதான் கோரியதாகவும், ஆனால், தனது கோரிக்கையை ஏற்காமல் தன்னை வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம், மோடியின் விமர்சனம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தோல்வி என்றும், பிறகு வெற்றிஎன்றும் அறிவிக்கப்பட்டதன் மர்மம் விசாரணையில் தெரியவரும்.

சென்னை கூட்டத்துக்கு முன்னதாகவே கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்துக்கொண்டு, அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் நரேந்திரமோடியின் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதன் மூலம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், கூட்டணிகுறித்து முடிவு செய்யப்படாததால், அது நிறைவேறவில்லை. கூட்டணிக்காக பாஜக அவசரப்படவில்லை.

பாஜக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரேகூட்டணியில் சேருவதாகக் கூறப்படுவது கற்பனை. கூட்டணியில் சேருவது குறித்து தே.மு.தி.க நல்ல அறிகுறியை தெரிவித்துவருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக பா.ஜ.க கூட்டணி அமையும். இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி.

மூன்றாவது அணியமைக்க முயற்சிப்பது முழுமை அடையாது. அதில், எல்லா கட்சிகளும் சேருமா என்பது தெரியாது. அவ்வாறு மூன்றாவது அணியமைந்தால், அதில் யார் பிரதமர் என அவர்களால் கூறமுடியாது. நாடு நலம்பெற நிலையான ஆட்சி தேவை.

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கக்கூடாது என்ற நோக்கில் தொடங்கப்பட்டது ஆம் ஆத்மிகட்சி. அவர்களுக்கு நிர்வாகம் செய்யத்தெரியவில்லை. ஜன லோக்பாலை நிறைவேற்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு விருப்பம் இல்லை. இதனால், மத்திய அரசின் மீது பழிபோட்டு பிரச்னைகளை தள்ளிப் போடுகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.