குஜராத்தில் இன கலவரத்தை காரணம் காட்டி முதல்–மந்திரி நரேந்திர மோடியை தொடர்ந்து புறக்கணித்து வந்தது.. மேலும், மோடிக்கு ராஜ்யரீதியிலான விசாவை அமெரிக்கா கடந்த 2005–ம் ஆண்டு ரத்துசெய்தது. மோடிக்கு மீண்டும் விசாவழங்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா நேரடியாக பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தது. தவிரவும், தொடர்ந்து மோடியை அமெரிக்கா புறக்கணித்துவந்தது.

மோடி எதிர்ப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்ய மறுத்தும்வந்தது. இந்த நிலையில் ஏப்ரல்–மே மாதங்களில் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவர் நாடுமுழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது பொதுக் கூட்டங்களில் மக்கள் திரளாகக் கூடுகின்றனர். பல்வேறு கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மோடி பிரதமர் ஆவார் என கூறிவருகின்றன.

இந்நிலையில் காட்சிகள் மாற தொடங்கியுள்ளன. குஜராத் இனக் கலவரங்களுக்காக மோடியைப் புறக்கணித்த மேற்கத்திய நாடுகளின் பார்வை மாறியது. அவை மோடியுடனான உறவை புறக்கணித்துவந்த நிலையை மாற்றின. அவற்றின் தூதர்கள் மோடியை சந்தித்துபேசினர். 10 ஆண்டுகாலம் மோடியை புறக்கணித்த இங்கிலாந்தும் தனது நிலையை மாற்றியது. இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ்பவன், நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இப்படி மோடியின் பக்கம் காற்று பலமாகவீசுவதை அறிந்து, அமெரிக்காவும் தன் நிலைப்பாட்டை அதிரடியாக மாற்றி கொண்டுள்ளது. இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் நடைபெற வேண்டுமானால், மோடியுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுவிட்டது. இதனால் மோடிக்கு எதிரான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு அமெரிக்கா ஆளாகியுள்ளது.

அந்தவகையில், இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் நான்சி பவல், மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது வரவுள்ள பாராளுமன்ற தேர்தல், இந்தியாவுக்கான மோடியின் எதிர்கால திட்டங்கள், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து மோடியிடம் நான்சிபவல் விரிவாகப் பேசுவார்.

இந்த சந்திப்புக்கு நான்சிபவல் முறைப்படி மோடியிடம் விண்ணப்பித்தார். அவரது வேண்டுகோளை மோடி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இன்று இந்தசந்திப்பு நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.