பாஜக. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பூரண மதுவிலக்கினை கொண்டுவந்தால் பொருளாதாரம் மேம்படும். சமூகம் பாதுகாக்கப்படும். மதுவினால் பெண்களுக்கு எதிரானகுற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்.

நரேந்திரமோடி முதல்மந்திரி ஆன பின்னால் குஜராத் அபாரவளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்பற்றாக் குறை நிலவிய குஜராத் தற்போது 16 மாநிலங்களுக்கு மின்சாரத்தைவிற்கிறது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும் தான் காவல் துறையில் இஸ்லாமியர்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். அங்குள்ள சிறுபான்மை மக்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

வாஜ்பாய் சிறந்த தலைவர் என்று திமுக. தலைவர் கருணாநிதி சொன்னதை வரவேற்கிறோம். வாஜ்பாயின் பாஜக. வேறு, மோடியின் பாஜக. வேறு என்று கருணாநிதி கூறியுள்ளார். வாஜ்பாயுடன் பழகியதுபோல நரேந்திர மோடியுடன் பழகும் வாய்ப்பு உருவானால் மோடியையும் கருணாநிதிக்கு பிடிக்கும். பாராளுமன்ற தேர்தலில் 3வது அணி காணாமல்போகும். 3வது அணியில் இருக்கும் கட்சிகளால் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் ஒருமித்தகருத்தை எட்டமுடியாது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் ஆவார் இவ்வாறு அவர் கூறினார்.

பெருந்துறை தாமரை திடலில் பாஜக. மகளிரணி சார்பில் இன்று (சனிக் கிழமை) மாலை 3 மணிக்கு பூரண மது விலக்கினை வலியுறுத்தி தாலிகாக்கும் தாமரைபோராட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய மகளிரணி தலைவர் சரோஜ்பாண்டே, மாநில மகளிரணி தலைவி தமிழரசி யோகம் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.