10 ஆண்டு கால மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சி சுதந்திர இந்தியாவின், மிகமோசமான ஊழல் ஆட்சி என்றும், கரைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர் என்று ஆட்சியை தொடங்கிய அவர், ஆட்சிமுடியும் தருவாயில் சுதந்திர இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசுக்கு சொந்தமானவர் என்று வரலாறுகூறும் அளவுக்கு தாழ்ந்து விட்டார் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கடுமையாக, விமர்சித்துள்ளார்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, நிதி அமைச்சராக பதவிவகித்தவர், மன்மோகன்சிங். அப்போது, அவருக்கு, கை சுத்தமானவர் என்ற, நற்பெயர் இருந்தது. அவர், பிரதமர்பொறுப்பை ஏற்றபோது, படித்தவர்களும், பொருளாதாரவாதிகளும், பொதுமக்களும், அவரிடம் பெரும் எதிர் பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால், அவரின், 10 ஆண்டுகால ஆட்சி, சுதந்திர இந்தியாவின், மிகமோசமான ஊழல் ஆட்சியாக திகழ்ந்தது. நாட்டில், இது வரை இருந்த அரசுகளிலேயே, மிகமோசமான அரசை நடத்தியவர் என்ற, களங்கம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. டில்லியில் நடந்த, காமன்வெல்த் விளையாட்டுபோட்டி ஏற்பாடுகளில் நடந்த, பிரமாண்ட ஊழல், அவரின் ஆட்சிகால ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டது.

இதையடுத்து, ஸ்பெக்டரம் 2ஜி ஒதுக்கீட்டில், 1.76 லட்சம்கோடி ரூபாய் முறைகேடு நடந்ததும், வெளிச்சத்துக்குவந்தது. இந்த முறைகேடுகள் அனைத்தும், மத்திய கணக்குதணிக்கை அலுவலகமான, சிஏஜி., தாக்கல்செய்த அறிக்கை வாயிலாகவே, வெளி உலகிற்கு தெரிந்தன.ஐ.மு.,கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, மிகமோசமான முறைகேடு, பார்லிமென்ட்டில் நம்பிக்கை ஓட்டுபெறுவதற்கு, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததுதான்.அமெரிக்காவுடனான, அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடதுசாரி கட்சிகள், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ்பெற்றன.இதையடுத்து, அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், நம்பிக்கை ஓட்டுபெறுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம்கொடுக்க, பேரம் பேசப்பட்டது.

இதுகுறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், அமெரிக்க அதிகாரி ஒருவருடன் பேசியவிஷயங்களை, வீக்கிலீக் இணையதளம் அம்பலப்படுத்தியது. பத்திரிகை ஒன்றிலும், இந்தசெய்தி வெளியானது.கடந்த, 2008, ஜூலை, 22ம் தேதி, பார்லிமென்ட் வரலாற்றில் ஒரு கறுப்புநாளாக அமைந்தது. மூன்று எம்பி.,க்கள், நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதற்க்கு, தங்களுக்கு பேரம்பேசப்பட்டதாக, கட்டுக்கட்டாக, ரூபாய் நோட்டுகளை, பார்லிமென்டில் கொண்டுவந்து கொட்டினர்.தற்போதும், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் ஆகியவை வெளிச் சத்துக்கு வந்துள்ளன. ஊழல்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் குழப்பமான நடவடிக்கைகளால், பார்லிமென்டும் அடிக்கடி முடங்கிவிடுகிறது.தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கும் மசோதாவை தாக்கல் செய்த போது, பார்லிமென்ட்டில் நடந்த அமளி, பார்லிமென்ட் வரலாற்றில், இதுவரை நான் பார்த்திராத ஒன்று.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.