தனது பதவிக்காலம் முடிவுறும் தருவாயில் உள்ள ஐ.மு..கூட்டணி அரசு, அரசு நிறுவனங்களின் வீழ்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தில் பின்னடைவு, அரசின் முடிவெடுக்கும் தன்மையில் நம்பிக்கையிழக்கவைக்கும் ஊழல் என அரசமைப்பில் தன் சிறு பங்கை 'பிரளயத்திற்கு பின்' விட்டுச்செல்கிறது.

தற்போது ஐ.மு.கூட்டணி அரசு, தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்தில் முழுவதும் சீர்குலைந்து கிடக்கிறது. தன் கட்சிக்குள்ளேயே, இனியும் கட்டுப்படுத்தமுடியாத, அடங்காத சக்திகளை கொண்டுள்ளது. தற்போதெல்லாம், பிரச்னைகளின்றி பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது மிகவும் அரிதாகிவிட்டது. பிரச்னைகள் உருவாவது முக்கிய எதிர்க்கட்சியினரால் அல்ல, தன்னுடைய ஐ.மு.கூட்டணியின் உறுப்பினர்களாலேயே. அரசு, குறிப்பாக பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும், தன்னிடமுள்ள பிரச்னைக்குரிய தாவாக்களை சரிசெய்ய முயலக்கூட முடியாமல் செயலிழந்துள்ளது.

இன்னும் தாமதமாகிவிடவில்லை, பிரச்னையின் வேரை கண்டுபிடித்து பொது கருத்தை உருவாக்க முயலலாம். முக்கிய பிரச்னைகளான, சீமாந்திராவின் தலைநகரை உருவாக்குவது, சீமாந்திராவிற்கு தனி உயர்நீதிமன்றம் அமைப்பதில் பொதுத்தன்மை உருவாக்குவது, மாநில பிரிப்பால் உண்டாகும் வருமான இழப்புக்கு உள்ளாகும் பகுதிக்கு தக்க நிவாரணம் காண்பது, மின்சாரம், நீர் போன்றவற்றில் ஒப்புக்கொள்ளத்தக்க பகிர்வு, உள்ளிட்ட மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். ஜார்கண்ட், உத்தர்காண்ட் மற்றும் சத்திஸ்கார் ஆகிய மூன்று மாநிலங்களை எங்கள் தே.ஜ.கூட்டணி அரசு பிரித்தபோது இத்தகைய அம்சங்கள் சுமுகமாக தீர்க்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் தீர்வற்ற தேக்கநிலையும், கடந்த வியாழனன்று நிகழ்ந்த விரும்பத்தகாத நிகழ்வும், ஐ.மு.கூட்டணியால் வேண்டுமென்றே தூண்டப்பட்டவை. சபை நடவடிக்கைகளில் குந்தகம் ஏற்படுத்தும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், ஐ.மு.கூட்டணியை சேர்ந்தவர்கள். தெலுங்கானா மற்றும் சீமாந்திர உறுப்பினர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த எந்த முயற்சியும் ஏற்படுத்தப்படவில்லை. ஒற்றுமைக்காக பொதுவிவாதம் எதுவும் நடத்தவில்லை. இருபகுதிகளின் விருப்பங்களை பாராளுமன்றம் விவாதிக்க முடியவில்லை. இதனால் இந்திய ஜனநாயகத்திற்கு தொடர்ந்து இழுக்கேற்படுகிறது. பாராளுமன்றத்தில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் பெரும்பான்மை மக்களிடையே அரசியல்வாதிகளின் மீதான தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இருபிரிவினருமே தாங்கள் அநீதி இழைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர். ஐ.மு.கூட்டணி அரசு, அரசாளத்தேவையான எல்லா ஆளுமைப்பண்புகளிலிருந்தும் விலகி வருகிறது. தெலுங்கானா உருவாவதில் சீமாந்திர மக்களுக்கு ஏற்படும் கவலைகளை களைந்து, அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, பாராளுமன்றத்திற்குள்ளோ வெளியேயோ பொதுவிவாதத்தை இன்றுகூட தொடங்கலாம், காலதாமதமாகிவிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.