இந்தியாவின் ஒரு அங்குல இடத்தைக்கூட பிற நாடுகளுக்கு விட்டுத்தர முடியாது என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது அருணாச்சலப் பிரதேசமக்கள் துணிச்சல் மிகுந்தவர்கள், அவர்கள் சீனர்களைகண்டு பயப்படுவதில்லை. குஜராத் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்துக்கும் இடையிலான உறவு, நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குபகுதிகளை இணைப்பது தான் .

இங்குள்ள ஆதி பழங்குடியினருக்கும், எனது முன்னோர்களுக்கும் ஒரேகுலப்பெயர் உள்ளது. 7000 மக்கள் தொகைகொண்ட இங்குள்ள ஆதிபழங்குடி மோடி குலத்திற்கு, குஜராத்தில் உள்ள மோடி குலத்துடன் உறவு முறை இருந்திருக்க வேண்டும்.

துவாரகாவைச் (குஜராத்) சேர்ந்த கிருஷ்ணபகவான் அருணாச்சலைச் சேர்ந்த ருக்மிணியை திருமணம் செய்தார். எனவே, அருணாச்சல பிரதேசத்துக்கும் குஜராத்துக்கும் 1000 ஆண்டுகளுக்கு மேலாக உறவு உள்ளது” அருணாச்சல பிரதேச மாணவர் டெல்லியில் படுகொலை செய்யப்பட்டதை நினைத்து கனத்த மனதுடன் அருணாச்சலப் பிரதேசத்துக்கு வந்துள்ளேன்.

வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை காங்கிரஸ் கட்சி தூண்டி வருகிறது சொந்த நாட்டு மக்களைவிட வங்கதேசமே காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம், தேர்தல்நேரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது . வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களை ஆட்சிக்குவந்ததும் திருப்பி அனுப்புவோம் ,

நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் , தற்போதைய காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசிலுக்கு முடிவுகட்ட வேண்டும் . நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல பாஜக உறுதி பூண்டுள்ளது என்று நரேந்திரமோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.