பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 240 க்கும் அதிகமான இடங்களை பாஜக. கூட்டணி கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிகின்றன. மேலும் நரேந்திர மோடி பிரதமராக எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலான மக்கள் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக. கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில கட்ச்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக. எடுத்துள்ள இந்த முயற்சி காரணமாக பீகாரில் லோக் ஜனசக்தி, ஆந்திராவில் தெலுங்கு தேசம், அசாமில் அசாம் கனபரிஷத் ஆகிய 3 கட்சிகள் பாஜக. கூட்டணியில் சேருவது உறுதியாகியுள்ளது. இந்த 3 கட்சிகளில் பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி பாஜக.வுடன் சேருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே பீகாரில் பாஜக. அலை வீசுகிறது. அங்குள்ள 40 இடங்களில் 21 இடங்களை பாஜக. வெல்லவாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. தற்போது தலித்களின் ஒரேகட்சியான பஸ்வானின் லோக்ஜனசக்தி சேர்வதால் 40–ல் பெரும்பாலான இடங்களை பாஜக–லோக் ஜன சக்தி கூட்டணி கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

பஸ்வான் போலவே சந்திரபாபு நாயுடுவும் தன் தெலுங்கு தேசம் கட்சியை பாஜக. கூட்டணியில் சேர்ப்பதில் உறுதியாக உள்ளார். தெலுங்கானாவுக்கு பாஜக. அதரவு தெரிவித்தபோதும் சீமாந்திரா மாநில மக்களுக்கு சிறப்பு பொருளாதார நிதி ஒதுக்கீட்டை பாஜக. போராடி பெற்றுக்கொடுத்தது.

இதன்காரணமாக சீமாந்திரா மக்களிடம் பா.ஜ.க வுக்கு ஆதராவான மனநிலை உருவாகியுள்ளது. எனவே பாஜக–தெலுங்குதேசம் கூட்டணி சீமாந்திராவில் அதிகஇடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கானாவில் மோடிக்கு ஆதரவாக 20 சதவீத மக்கள் இருப்பது ஒருசர்வேயில் தெரியவந்துள்ளது. மேலும் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் சுமார் 14 சதவீத வாக்குவங்கி உள்ளது. எனவே தெலுங்கானாவிலும் பாஜக–தெலுங்குதேசம் கூட்டணிக்கு ஒரளவு வெற்றிகிடைக்கும் என்று தெரிகிறது.

மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது போல வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆரதவுதிரட்டும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக அசாம் கனபரிஷத்கட்சியை பா.ஜ.க. அணிக்குள் கொண்டு வர ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, அமித்ஷா ஆகியோர் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் பாஜக–காங்கிரஸ் ஆகிய இரு கட்சிக்கும் சமமான வாக்கு வாங்கியே உள்ளது. அசாம் கனபரிஷத் கட்சிக்கு 15 சதவீத ஓட்டுள்ளது.

எனவே பாஜக–அசாம் தனபரிஷத் கூட்டணி ஏற்பட்டால் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்று பாஜக. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறார்கள்.

பாஜக., பாராளுமன்றக் குழு கூட்டம் வரும் 27–ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பாஜக. வின் கூட்டணி கட்சிகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எந்தெந்த கட்சிகள் பாஜக.வுடன் கைகோர்த்து ஓரணியில் திரள்கின்றன என்பது 27–ந் தேதி தெரியவரும்.

இதை கருத்தில் கொண்டே இன்னும் 2 நாளில் பாஜக–தேமுதிக. கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வலுவான மாநில கட்சிகளுடன் சேர்வதன் மூலம் பாஜக. கூட்டணி மிக எளிதாக சுமார் 300 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.