பிரிட்டனின் ஆராய்ச்சியாளர் ஒருவர் பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டதற்கு பாஜக. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால் பகத்சிங்கை சுதந்திரப் போராட்ட தியாகி என பிரிட்டனை குறிப்பிட வைப்போம் என்றும் பாஜக தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜக்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக. வின் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது _

பிரிட்டனில் பகத்சிங்கை பயங்கரவாதி என அழைப்பது நமக்கு மிக்கவேதனையையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில்ஆட்சிக்குவந்தால் பகத் சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ள மேற்கூறிய புத்தகத்தில் திருத்தம்செய்ய பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுப்போம். இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவோம்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரையில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியாது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரக்கோரி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நாடுதழுவிய ரத யாத்திரையை மேற்கொண்டார்.

ஊழலை ஒழிக்க கடுமையான நடைமுறை கள் வகுக்கப்படவேண்டும் என்று கூறும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது ஆட்சிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ? என கேள்வி எழுப்பினார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.