மன்மோகன்சிங் அவர்களின் திறமையான பொருளாதார திறமையை தெரிந்துகொள்ள ஒரு 5நிமிடம் ஒதுக்கி இந்த கட்டுரையை படித்து ஷேர் செய்யுங்கள்… நீங்கள் ஷேர் செய்வது நம் நாட்டிற்கு செய்யும் நன்மை…

மன்மோகன் சிங்கை குறைசொல்லும் அப்பாடக்கர்களே..

அமெரிக்காவை அமெரிக்கர்களே காப்பாற்ற முடியாதநேரத்தில், மன்மோகன் அவர்கள் அவதார்-ஆக உருவெடுத்தார்,

அப்போது அமெரிக்காவிடம் ஒரு போர்க் கப்பல் இருந்தது. அந்த கப்பல், 30 வருடங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்ட, அடுத்து உடைத்து வீசப்பட வேண்டிய கப்பல். அப்போது நம் அவதார் கண் திறந்தார். அந்தக்கப்பலை இந்தியக் கப்பல்படைக்காக 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அதே 400 கோடி ரூபாய் நிதி திரட்டவே நெய்வேலி என்எல்சி.-யை தனியார் மயமாக்குவதாக, தற்போது அவதார் சொல்வதில் இருந்து, 400 கோடி என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் அல்ல என்று நாம் அறிந்து கொள்ளலாம்!

அமெரிக்கா என்பது மக்கள் அல்ல. அங்குள்ள நிறுவனங்கள்தான். அது ஒரு முழு முதலாளித்துவ தேசம். ஆனாலும் அதிசயமாக மக்கள் ஒரு விஷயத்திற்காக ஒன்றுகூடிப்போராடி, வெற்றிகண்டர்கள். அது, அங்கே இனிமேல் அணு உலை கட்டக் கூடாது என்பது தான். அணு உலை அமைக்கும் நிறுவனங்கள் எல்லாம் நொடித்துப்போயின.

நிறுவனங்கள் நொடித்தால், வேலைஇழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம். என்ன செய்வது என்று அவர்கள் திகைத்த போது, அவதார் மீண்டும் கருணை காட்டினார். இந்தியாவில் பலத்த எதிர்ப்பையும் மீறி அணுசக்தி ஒப்பந்தம் மூலம் 20 உலைகளுக்குமேல் அமைக்கப் போவதாக அறிவித்தார். 'ஆஹா..ஆஹா..2000 வருடங்கள் கழித்துவருவதாகச் சொல்லிச்சென்ற இயேசுபிரான் இவர் தானோ?' என்று அமெரிக்கர்களே குழம்பும் வண்ணம், அடுத்தடுத்து தனது பொருளாத அறிவின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதுவும், இந்தியாவில் இருந்தபடியே. அடடா..அடடா!

இப்போது கூட வால்மார்ட் போன்ற ஏழை பொட்டிக்கடை முதலாளிகளுக்கு இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் கடை வைத்தாலும் மக்கள் வாங்கவேண்டுமே? 'இவர்கள் ரேசனிலேயே வாழ்வதற்கு அரிசி, பருப்பும், சாவதற்கு மண்ணெண்ணெயும் வாங்கிக்கொண்டிருக்கிறார்களே' என்று சிந்தித்த நம் பொருளாதரச்சிற்பி, மெதுவாக ரேசன் கடைகளை அழிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, இனிமேல் உங்கள் அக்கவுண்ன்டிலேயே காசுபோட்டு விடுவோம். நீங்கள் அதை எடுத்துக் கொண்டு, இப்போதைக்கு அண்ணாச்சி கடையிலும், பின்னாளில் வால் மார்ட்டிலும் பொருள் வாங்கிக் கொள்ளலாம். இந்திய அரசின் நிர்வாகச் சுமையைக்குறைத்த மாதிரியும் ஆச்சு, அமெரிக்க பொட்டிக்கடை அண்ணாச்சிகளுக்கு கஸ்டமர் பிடித்துக் கொடுத்த மாதிரியும் ஆயிற்று.

எவ்வளவு தீர்க்க தரிசனம் உள்ள, பொருளாதார சிந்தனைச் சிற்பி அவர். இவ்வாறாக, பல்வேறு திட்டங்கள் தீட்டி, திவாலாகப்போன அமெரிக்காவையே காப்பாற்றிய மன்மோகனையா குறை சொல்கிறீர்கள்? ஒரு இந்தியனால் அமெரிக்கா மேலெழுகிறது என்பது உலகரங்கில் நமக்கெல்லாம் பெருமை என்று புரியவில்லையா அறிவிலிகளே?

டாலரில் நாம் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தும் நேரம் இது என்று சொல்கிறார்கள். கூடவே வட்டியும் உண்டு. அதனாலேயே ரூபாய்,அளவுக்கதிகமாக மதிப்பு வீழ்த்தப்படுவதாக பொருளாத உலகில் ஒருகிசுகிசு உலவுகிறது. அதாவது 40 ரூபாய் கடன்வாங்கிவிட்டு, தற்போதிய மதிப்பில் 65 ரூபாய் திருப்பிச் செலுத்த போகிறோம். அமெரிக்காவிற்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்கிறோம்! அப்பேர்ப்பட்ட வல்லரசையே தூக்கி நிறுத்தும் நிஜவல்லரசு நம் பொருளாதார மேதை மன்மோகன் என்பதை நினைவில் வையுங்கள்.

எங்கள் மண்ணு மோகனிடம் நேர்மை இல்லாமல் இருக்கலாம், சூடுசுரணை இல்லாமல் இருக்கலாம்..ஏன், தேசபக்திகூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் பொருளாதர அறிவு இல்லை என்று சொல்லாதீர்கள். தான் நினைத்ததை முடித்த, அமெரிக்க ரட்சகர் அவர்.

வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.