மேற்கு நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு பின், ஆசியாவின் பொருளாதாதரங்கள் மறுபடியும் ஒன்றிணைகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி (GDP), அமெரிக்காவை பின் தள்ளி 2040ல் சீனா முன்னிலை வகிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியா சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்கரம் ஒரு சுற்று சுழன்றுவிட்டது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி (GDP), 1750ல் 1.7 சதவீதமாக இந்தியாவும், 6.2 சதவீதமாக சீனாவும் இருந்தது, தற்போது தொழிற்புரட்சியின் விளைவால், இந்தியா 24.5 சதவீதமும் மற்றும் சீனாவின் பங்கு 33 சதவீதமாகவும் ஆகியுள்ளது , பேரரசுகளாக மாறியும் உள்ளது மீதத்தை மட்டும்தான் மீட்டெடுக்க வேண்டும்.

இந்தியாவும் சீனாவும் உலக மக்கள்தொகையில் பாதியை சுமார் 360 கோடி தன்னகத்தே கொண்டுள்ளது. சீனாவைப்போலல்லாமல் இந்தியாவில் மக்கள்தொகையில் அதிகம் பேர் இளைஞர்களே உள்ளனர். மேற்கு நாடுகளின் சார்ந்திருக்கும் விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவிலோ 30/40 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. அதாவது, 1964ல் 81ம், 2010ல் 55. சீனாவின் ஒரே குழந்தை கொள்கை, சார்பு விகிதத்தை கூட்டிவிட்டது. 2020ல் இந்தியாவில் சராசரி வயது 29 ஆகவும், சீனா 37 ஆகவும், ஜப்பான் 48 ஆகவும் இருக்கும்.

இந்தியாவில் வளர்ச்சிக்கு எதிரான சவால்கள், அடிப்படையில் வளர்ச்சியடைந்த உலக நாடுகளை விட வேறானவை. வேலைவாய்ப்பு, உணவுப்பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வளங்களை சரியாக பயன்படுத்தல் போன்றவை கருத்தில் கொள்ள வேண்டியவை. உதாரணத்திற்கு, முக்கிய பலமாகவும், நூற்றாண்டு மாற்றத்திற்கு ஆதாரமாகவும் இருந்திருக்க வேண்டிய நம் கல்வித்திட்டம், திறன் மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பிற்கும் கவனமளிக்கவில்லை. கல்விக்காக செலவிடப்பட்ட தொகை, 1999க்கும் 2009க்கும் இடையில் 350 சதவீதம் உயர்ந்தது. ஆனால், செலவுக்கேற்ற வகையில் பயன்கள் பெறப்படவில்லை. என்னதான் 128 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு பெற்றாலும், மொத்த பணிசக்தியில், துறைத்திறன் பயிற்சி பெற்றோர் வெறும் 2 சதவீதமே.

தேசிய மாதிரி புள்ளியியல் நிறுவனத்தின்(NSSO) ஆய்வின்படி, 2004-'05 முதல் 2009-'10 வரையான காலகட்டத்தில் இந்தியாவில் வேலை வாய்ப்பு விகிதம் 0.83 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் 1999-2000 முதல் 2004-'05 வரையான காலத்தில் அது 2.66 சதவீதம் இருந்தது. ஜனவரி 2012ல் இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கை சுமார் 108 லட்சம் பேர் ஆக இருக்கும்.

2014ல் முதல் முறையாக வாக்களிப்போர் 15 கோடி பேர் என கணக்கிடப்பட்டுள்ளது (மொத்த வாக்காளர்களில் 20% பேர்). 30% வாக்காளர்கள் 35 வயதுக்குட்பட்டோர். 18-35 வயதுக்குட்பட்ட இந்த மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். மொழித்திறனுடைய, நம்பிக்கையுள்ள, கேள்விகேட்கும், சக்தியுள்ள புதிய தலைமுறையினர். தொழில்நுட்பத்திறனுடன் இணைந்த மக்கள்தொகையின் இப்பிரிவு புதிய சக்தியை தோற்றுவித்ததுள்ளது. இந்திய இளைஞர்கள் உலக சந்தையில் பங்கேற்கின்றனர். வேலைவைப்பு, முன்னேற்றம்,

நிர்வாகம், பொருளாதார முன்னேற்றம், தேச பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்த விவாதங்களை இளைஞர்கள் துவக்கி பங்குகொள்கின்றனர். மேலும் 2014 பொதுத்தேர்தலின் முடிவை வடிவமைக்க உறுதி கொண்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள விலைவாசி, ஊழல், உள்நாட்டு பாதுகாப்பு, ஆண் பெண் சமத்துவம் போன்ற பிரச்சினைகளில் அவர்களின் அணுகு முறை மிகவும் பங்குகொள்ளும் வகையில் உள்ளது. வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்து விட விரும்பவில்லை. 9 ஆண்டு கால இ.ஜ.கூட்டணி ஆட்சிக்கு பிறகு அவர்கள்  மாற்றத்தையும் புதிய தலைமையும் விரும்புகின்றனர். குஜராத்தில் முதல்வராக நரேந்த்ர மோடியின் செயல்பாடு – மோதிஜி 'செய்பவர், நம் எதிர்பார்ப்பை உணர்ந்து அதை நிறைவேற்றுபவர், நம் இலக்கை அடைய உதவி புரிபவர்' – தேசிய அளவிலும், மாநில அளவிலும் – என்ற எண்ணத்தை அவர்களிடையே தோற்றுவித்துள்ளது, இளைய இந்தியாவின் சின்னமாக அவர் விலங்குவதுதான் ஒரு சிறிய ஆச்சர்யம்!

நன்றி -முரளிதர் ராவ்

தேசிய பொதுச்செயலாளர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.