பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்தகட்ட அரசு முறைப்பயணம் தயாராகிவிட்டது. அதன்படி, வரும் 7-ம் தேதியன்று அவர் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 4 நாடுகளுக்கு செல்லஉள்ளார்.

வருகிற 7-ம் தேதியன்று முதல்நாடாக மொசாம்பிக் நாட்டுக்கு செல்லும் அவர் அதன் பின்னர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, 10-ம் தேதி தான்சானியாவுக்கும், 11-ம்தேதி கென்ய நாட்டுக்கும் செல்கிறார்.

அதனையடுத்து, 12-ம் தேதியன்று தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.  இந்தபயணத்தின் போது, பல்லாயிரக் கணக்கான இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி உரையாற்றுவார் என தெரிகிறது.

Leave a Reply