புதுக்கோட்டை அருகே பயணிகளை ஏற்றிவந்த டாடா ஏஸ் வேன்மீது தனியார் பேருந்துமோதி விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உட்ப்பட 7 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

புதுக்கோட்டை அருகே கைக் குறிச்சியில் இருந்து வல்லத்திராக் கோட்டை நோக்கிவந்து கொண்டிருந்த டாடா ஏஸ் வேன்மீது, எதிரேவந்த தனியார்பேருந்து மோதியது. இந்த விபத்தில், வேனில் லிஃப்ட்கேட்டு வந்த 7 பள்ளிமாணவர்கள் உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் வல்லத்திராக் கோட்டையில் உள்ள அரசுபள்ளி ஒன்றில் படித்துவந்தவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் கைக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Leave a Reply