விசாகப்பட்டினத்தில், நீர்மூழ்கி கப்பல்கட்டும் பணியின்போது நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்துடன் கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 13 கப்பல்விபத்துகள் நடைபெற்றுள்ளன

அதில் 22 பேர் மரணமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரமாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் கப்பல்கட்டும் தளத்தில் ஐஎன்எஸ். அரிஹந்த் என்ற அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பல் கட்டும்பணி நடந்துவருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று பணி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு தொட்டியின் அழுத்தத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டியின்மூடி திடீரென தொழிலாளர்களின் மீதுவிழுந்தது. இந்தவிபத்தில் அமர் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும் இரண்டு 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேபோல் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 7 மாதங்களில் 13 கப்பல்விபத்துகள் நடைபெற்று உள்ளன. அதில் மிகபெரிய விபத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ந் தேதி ‘ஐஎன்எஸ். சிந்து ரக்ஷாக்’ என்ற போர்க்கப்பல் கடலில் மூழ்கியதாகும். இந்த விபத்தில் 18 வீரர்கள் பலியானார்கள்.

மேலும், கடந்தமாதம் தொடக்கத்தில் ‘ஐஎன்எஸ். ஐராவத்’ என்ற போர்க் கப்பல் தரை தட்டியது. மும்பை துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, விமானம்தாங்கி, ஐஎன்எஸ். விராட் போர்கப்பலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.

டிசம்பர் 4ம் தேதி விசாகப்பட்டினம் கடலில் ஐஎன்எஸ் கொங்கண் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி ஐஎன்எஸ் தல்வார் கப்பல், மீன்பிடிகப்பலுடன் மோதியது.

ஜனவரி 17ம் தேதி ஐஎன்எஸ் சிந்து கோஷ் கப்பல் நிலை நிறுத்தும் பகுதியில்மோதி விபத்துக்குள்ளானது. ஜனவரி 20ம் தேதி ஐஎன்எஸ் விபுல் கப்பலில், பல்வேறு சோதனைகளுக்குபிறகும், கப்பலின் ஒருபகுதியில் கசிவுதொடர்ந்தது. அதேபோல ஜனவரி 22 ம் தேதி ஐஎன்எஸ் பெட்வா கப்பலின் ஒருபகுதியில் விரிசல் ஏற்பட்டது. 2014, ஜனவரி – “ஐ.என்.எஸ்., சிந்து கோஷ்’ திடீரென தரை தட்டி நின்றது.

மும்பையில் கடந்த பிப்ரவரி 26ந் தேதி இந்திய கடற் படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ். சிந்து ரத்னா’ என்ற நீர் மூழ்கி போர்க் கப்பல் திடீர் தீ விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் சிக்கி கடற் படை அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் 7பேர் படுகாயம் அடைந்தனர். நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று கடற்படைதளபதி அட்மிரல் டிகே. ஜோஷி பதவி விலகினார்.

மும்பை மசாகான் கடற் படைத் தளத்தில், ஐஎன்எஸ் கொல்கத்தாயார்ட் 701 என்ற போர்க்கப்பலை கட்டும்பணி நடைபெற்று வருகிறது. முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு, கடந்த சிலவாரங்களாக பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை மஜகாவ் கப்பல்கட்டும் தளத்தில் மார்ச் 7ம் தேதியன்று இந்தகப்பலில் தீயணைப்பு கருவிகள் சரியாக செயல்படுகின்றனவா என சோதனை செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக, கார்பன்-டை ஆக்சைடு நிரப்பப்பட்ட கொள்கலனின் மூடி உடைந்து, வாயுகசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது இதுவே காங்கிரசின் சாதனைகளாகும்.

Tags:

Leave a Reply