இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து முன்னணி துவக்கப்பட்டு, 35ம் ஆண்டு நிறைவு விழா, முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் நுாற்றாண்டு விழா மற்றும் தமிழக பாதுகாப்பு, ஏழாவது மாநில மாநாடு ஆகியவை கோவை கொடிசியா வளாகம் அருகில், ஜூன், 7ம் தேதி மாலை, 4 மணிக்கு நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத இணை பொது செயலாளர் தத்தாத்ரேயா, இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன், கேரளா மாநில ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சசிகலா டீச்சர், மலேசிய இந்து சேவா சங்கம், கிழக்காசிய அமைப்பாளர் ராமச்சந்திரன், சிங்கப்பூர் இந்து முன்னணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கின்றனர். பேரணி, சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் முன் துவங்கி, கொடிசியா அருகே நிறைவடையும். ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத செயற்குழு உறுப்பினர் சேது மாதவன் துவக்கி வைக்கிறார். பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறுஅறிக்கையில் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Leave a Reply