பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான கங்கை தூய்மை திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடுசெய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கங்கை நதியை சுத்தப் படுத்தி பாதுகாப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும் இந்த பிரதான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கங்கை நதியை பாதுகாப்பதற்காக 1985ம் ஆண்டு முதல் சுமார் 4 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலவுசெய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்திற்காக கணிசமானதொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளும்" என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply