பா.ஜ.கவுக்கு மிக அதிக செல்வாக்குள்ள 70 தொகுதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:–

தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியா குமரியில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும், தர்மபுரியில் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க முதலிடத்தை பிடித்தது.

கோவை உள்ளிட்ட சிலமாவட்டங்களில் 60 தொகுதிகளில் 2வது இடத்தையும் பிடித்தது. எனவே பா.ஜ.க.,வுக்கு மிக அதிக செல்வாக்குள்ள அந்த 70 தொகுதிகளுக்கும் முன்னுரிமைகொடுத்து தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக முதலில் கட்சி அமைப்பை பலப்படுத்துவது, பூத்கமிட்டிகளை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதைதொடர்ந்து தொண்டர்கள் மக்களை சந்திப்பார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துசொல்லும் வகையில் கட்சியின் பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply