மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியான ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.

ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான்மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக் கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்ட போது நெரிசல் ஏற்பட்டது. ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்துசெல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத்திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர்.

பிற்பகல் 220 பேர் இறந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாகவும் சவுதி அரேபிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்தவண்ணம் உள்ளது.

மாலை நிலவரப்படி 700 பேர் பலியானதாகவும், 719 பேர் காயமடைந்த தாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் அமெரிக்காவில் இருந்து டுவிட்செய்துள்ளார்.

நெரிசலில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள 0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.