மகாராஷ்டிராவில் ரூ.70,000 கோடி நீர்ப்பாசன ஊழல்வழக்கு விசாரணை தாமதமாக நடக்கிறது என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர மாநில எதிர்க் கட்சித் தலைவரும், பா.ஜ.க எம்எல்ஏ. வுமான வினோத்தாடே மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநில நீர்ப் பாசன துறையில் நடந்துள்ள ரூ.70,000கோடி ஊழலுக்கு என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் ஆளும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நீர்ப்பாசன ஊழல் குறித்து விவாதம் செய்வதில் காலதாமதம் செய்துவருகின்றன.

நீர்ப்பாசன ஊழல் குறித்து மேலும் பலவிவரங்களை அறிந்துகொள்ள மாநில அரசு எனக்கு உதவ மறுத்துவிட்டது.

இந்த ஊழல் பற்றி விசாரிக்கும் சிட்டேல்குழு, நான் நீர்ப்பாசன ஊழல் குறித்து அளிக்கவிரும்பிய ஆதாரங்களை பெற மறுத்துவிட்டது. இதற்கு மாநில அரசுதான் காரணம் என தெரிவித்தார்.

Leave a Reply