மீன்பிடி தடைக் காலம் முடிந்து, மீன் பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை அரசைக் கண்டித்த பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, இந்நிலை தொடர்ந்தால் தக்கபதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது என எச்சரித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து மேலும் கூறியதாவது அமைச்சரவை குழுக்களை பிரதமர் கலைத்திருப்பதன் மூலம், அந்தந்த துறையைச்சேர்ந்த அனைத்து விஷயங்களுக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது.

காஷ்மீர் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தி, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்துசெய்யும். ஏற்கெனவே மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசின் தவறானக் கொள்கையால்தான் தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது தான். விரைவில் பிரதமரால் இதற்காக ஒருகொள்கை வகுக்கப்பட்டு, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜக அரசு, எந்த பிரச்சினையையுமே சுமுகமாகப் பேசித்தீர்க்கும். இந்த அடிப்படையில் தான் மத்திய அரசின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் அழைக்கப்பட்டார். தற்போது, மீன்பிடித் தடைக் காலம் முடிந்த நிலையில், மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால், தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.