சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி மக்களை பாதுகாக்க முடியாத சமாஜ் வாதி கட்சி ஆட்சியில் இருக்க தகுதிஇல்லை என்று உ.பி. ஆளுநர் ஜோஷிக்கு பா.ஜ.க கடிதம் எழுதியுள்ளது.

“மாநிலத்தில் சட்டம் ஒழுங்குநிலவரம் அடிமட்டத்திற்குச் சென்றுவிட்டது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரு மாவட்டம்கூட அங்கு இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. நல்லாட்சியையும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத ஒருஅரசு ஆட்சியில் இருக்க உரிமையற்றது” – என்று பாஜக-வின் மாநிலத் தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும், குற்றங்கள் நடக்கும், அதனை கட்டுப்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதே அரசின் கடமையாகும் ஆனால் அகிலேஷ் அரசு இதற்கு எதிர் மாறாகச் செயல்பட்டு வருகிறது.

உ.பி. காவல்துறை பாதிக்கப்பட்ட வர்களை அடக்கி ஒடுக்கி குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்துவருகிறது என்றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.