எம்.பி.,க்கள் யாரும் என் காலிலோ அல்லது இதர பாஜக., தலைவர்களின் காலிலோ விழக் கூடாது. ‘காக்கா பிடிக்கும் வேலையிலும் ஈடுபடக்கூடாது’ அறிவுத்திறமையை வளர்த்து, சிறந்த எம்.பி.,க்களாக பணியாற்ற வேண்டும்’ என்று , பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியுள்ளார்.

லோக் சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்ற, பாஜக., பார்லிமென்ட் கட்சிக்கூட்டம், நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:என்னை சந்திக்கும், புதிய எம்பி.,க்கள் பலர், என் காலைத்தொட்டு வணங்குகின்றனர். இனி, எம்பி.,க்கள் யாரும் என் காலிலோ, இதர பாஜக., தலைவர்களின் காலிலோ விழக்கூடாது. ‘காக்கா’ பிடிக்கும், முகஸ்துதி பாடும் வேலைகளில் ஈடுபடக்கூடாது.எம்.பி.,க்கள் எல்லாம் கடுமையாக பணியாற்றவேண்டும். அறிவுத்திறனை வளர்த்து கொள்ளவேண்டும்.

லோக்சபா நடவடிக்கைகளில் சிறப்பாக பங்கேற்று, சிறந்த பார்லிமென்ட்வாதி என, பெயர் எடுக்கவேண்டும்., அவரவர் தொகுதிகளில், சிறப்பாக மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மெத்தனமாக இருக்கக் கூடாது. கீழ்மட்ட அளவில் உள்ள மக்களை அடிக்கடி சந்தித்து, அவர்களுடனான தொடர்பை அதிகரித்து கொள்ளவேண்டும். லோக் சபா தேர்தலில், பாஜக., பெரும் வெற்றி பெற, மக்களின் அமோக ஆதரவேகாரணம். அந்த ஆதரவை, எந்த வகையிலும் இழந்து விட கூடாது.பாஜக., இப்போது எதிர்க் கட்சி அல்ல; ஆளும் கட்சி. அதனால், அரசின் திட்டங்களை, கீழ் மட்ட அளவில் உள்ள மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, எம்.பி.,க்களுக்கு உண்டு .

லோக்சபா நடவடிக்கைகள் சுமுக மாக நடைபெறும் வகையில், எம்.பி.,க்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும். சபையின் கவுரவத்தை பேணிக்காக்கும் அதேநேரத்தில், சபை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

பாஜக., – எம்.பி.,க்கள் யாரும், கட்சி பிரச்னைகள் பற்றி, கட்சியின் தகவல்தொடர்பாளர் போல, ஊடகங்களுடன் பேசக் கூடாது. அதே நேரத்தில், தங்கள் பகுதியின் அல்லது தொகுதியின் பிரச்னைகள் குறித்து பேசலாம்.பார்லிமென்ட் விவாதங்களில் பங்கேற்கும் போது, அதற்கேற்ற வகையில் விவரங்களுடன் தயார் நிலையில் வரவேண்டும். சபை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பதன் மூலம், பல பிரச்னைகள் தொடர்பான விவரங்களை, முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக, பாஜக., வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.