ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு வங்கப்பிரிவு கூண்டோடு பாஜக.,வில் இணைய இருக்கிறது. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் நேற்று மேற்குவங்க மாநிலத்தின் பாஜக தலைவர் ராகுல்சின்ஹா கூறியதாவது:

மேற்கு வங்க ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பாஜக.,வில் இணைவதற்கு முடிவு செய்துள்ளனர். அந்தகட்சியின் மேற்கு வங்கபிரிவு கூண்டோடு பாஜகவுடன் ஐக்கியமாகிறது. மேலும் பிற கட்சிகளை சேர்ந்த ஏராளமான தலைவர்களும் பா.ஜ.க.,வில் இணைய இருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் கோஷும் பா.ஜ.க.,வில் இணைய இருக்கிறார். என்று ராகுல் சின்ஹா கூறினார்.

Leave a Reply