இளம்வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைபடைத்த பள்ளி மாணவி மற்றும் மாணவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.

தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் உள்ள சமூக நலப்பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி பூர்ணா மற்றும் கம்மம் பகுதியில் உள்ள சமூக நலப்பள்ளியில் பயிலும் 17 வயது மாணவர் ஆனந்த்குமார் ஆகிய இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினர்.

இதில், மாணவி பூர்ணா மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உலக சாதனையையும் படைத்தார். இந்நிலையில், அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.

எவரெஸ்ட் சிகரத்தில் அவர்கள் மேற்கொண்ட பயணம் பற்றிக்கேட்டறிந்த பிரதமர் மோடி, அவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கினார்.

மாணவி பூர்ணாவின் குடும்பத்தினர் விவசாயபணியையும், மாணவர் ஆனந்த் குமாரின் தந்தை சைக்கிள் கடையும் வைத்துள்ளனர். சாதனை படைப்பதற்கு பொருளாதார பின் புலம் ஒரு தடையாக இருக்காது என்பதை தங்களின் சாதனை மூலம் உலகிற்கு உணர்த்தியிருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.