அமெரிக்க நாட்டின் புதியபேஷன் அவதாரமாக பார்க்கப்படுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி. அமெரிக்காவின் டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் ஆகிய முன்னணி ஊடகங்களில் மோடியின் உடை அலங்காரம் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. ‘மோடி குர்தா’ அமெரிக்க முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளது.

எ லீடர் ஹூ ஈஸ்வாட் ஹீ வேர்ஸ் (‘A Leader Who Is What He Wears’ ) என்ற தலைப்பில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘உலகளவில் மிச்செல் ஒபாமா, பிரான் கோயிஸ் ஹோலண்டே, டில்மா ரூசோப், மண்டேலா உள்ளிட்ட பலரது உடை அலங்காரம் குறித்து தனிப்பட்ட வலைப் பூக்களே உருவாக்கப்பட்டிருந்தாலும், நரேந்திர மோடியின் உடை அலங்காரம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடும்போது இந்திய தலைவர்கள் தங்கள் உடை அலங்காரத்தையே தங்கள் எண்ணங்களை உணர்த்தும் உபகரணமாக பயன் படுத்துவார்கள். ஆனால் மோடி அவர்களையும் விஞ்சி விட்டார். அவரது உடை நிறையவே உணர்த்துகிறது.’ என குறிப்பிட்டுள்ளது. மோடிபேஷன் மோடியின் பேஷன் குறித்து ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை, ‘மிச்செல் ஒபாமாவே தள்ளியிருங்கள் இந்த உலகிற்கு புதிய பேஷன் நாயகர் கிடைத்துவிட்டார்’ என புகழாரம் சூட்டியுள்ளது.

சமீபத்தில் ‘டைம்’ பத்திரிகையில் வெளியான ஒருகட்டுரையில், ‘இந்திய பேஷன் உலகில் நரேந்திர மோடிக்குத் தான் அடுத்த பெரிய இடம்’ என குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.