குற்றப் பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்குகளை ஒருஆண்டுக்குள் முடித்து தீர்ப்பளிக்குமாறு நீதித் துறையைக் கேட்டுக் கொள்வோம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மக்களவையில் உள்ளவர்கள் சிலர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று பொது மக்கள் பார்வை உள்ளது. இந்த கறையை போக்கியாக வேண்டும். எந்த உறுப்பினர் மீதும் இருக்கும் நிலுவை வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரித்து ஒரு ஆண்டுக்குள் நீதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்வோம்.

குற்றம்செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள், செய்யாதவர்கள் மதிப்புடன் தலை நிமிர்ந்து நடக்கலாம். சட்டம் தன்கடமையை செய்யும் குற்றம் செய்தவர்கள் தப்பமுடியாது. அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

ஊழல்பிரச்சினை குறித்து அவர் பேசுகையில், ஆட்சி அதிகாரத்தில் மோசமான நிர்வாகம் என்ற ஒன்று நுழைவது உடலில் சர்க்கரைநோய் நுழைவது போல. அது ஒட்டு மொத்த அமைப்பையும் பாழ்படுத்தி விடும் என்றார். ஊழல் இந்தியா என்ற பெயரை அழிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.